பக்கம்:வெறுந்தாள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வெறுந்தாள் 'கந்தல்; கிழிச்சல், கட்டும் புடவைகள்; புடவையைவிட ஒட்டுகள் தாம் மிகுதி, ஒட்டிய வயிறும் கட்டிய கந்தலும் இந்த நாட்டுக் குடிமகளின் சின்னம்’ என்று பாடிய கவிஞர், பட்டுப் புடவை மட்டும் கட்டும் பகட்டான வாழ்வு பெற்றுள்ளதைக் கண்டு எனக்குள் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. 'நீங்களும் உடன் போனிர்களா?” 'நான்தான் 'செலக்ட்' பண்ணித் தந்தேன். "அவர் எடுத்துக் கொடுத்தால் அதுவே போதும்” என்று அவள் திருப்தி அடைந்தாள். என் செலக்ஷன் அவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அவள் கடைக்கே வரவில்லை. நான் போனால் போதும் என்றாள்'. பட்டிக்காடு போல இருக்கிறது” 'இல்லைங்க அவ்வளவு நாணம்; வெட்கம், அச்சம். அதிலே அவள் சம்பிரதாயப் பெண்,' அதற்கு மேல் அவள் கேள்வி தொடர்ந்து கேட்பதை நான் விரும்பவில்லை. 'கட்டாயம் வருகிறோம்' என்று கூறி அவன் தந்த பத்திரிகையைப் பெற்றுக் கொண்டேன். உடனே சென்று குங்குமப் பேழை கொண்டு வருவது அவள் வழக்கம். ஆனால் அங்கு அழைக்க எந்தப் பெண்ணும் வராததால் வெறுங்கையோடு திரும்பிச் சொன்றாள். 'ஏழையின் கண்ணிர்' என்று அதில் இருந்த புதுக் கவிதை ஒன்று எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண் டிருந்தது. அவன் என் நினைவு அலைகளில் ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டான். சரசுவதி எனக்கு இந்த நாட்டுப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/107&oldid=914506" இலிருந்து மீள்விக்கப்பட்டது