பக்கம்:வெறுந்தாள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 109 அவள். அவளுக்கு ஞானம் என்ற பெயர் வைத்தது மிகப் பொருத்தம் என்று எனக்குப் பட்டது. 'உண்மையில் நீ தான் ஞானம், நீயே தான்' என்றேன். "அதைக் கொடுத்தால் அக்கவிஞரின் மதிப்பு உயரும்; இனி இந்த மாதிரிப் புதுக் கவிதைகளை அவர் எழுதிக் கொண்டிருக்கமாட்டார்கள்' என்று கூறினாள். 'சரி' என்று இந்த மூன்று பொருள்களையும் பரிசுப் பொருள்களாக வாங்கிக் கொண்டேன். அவர்கள் இருவரும் இப்படி மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களை நொந்து பயன் இல்லை. இன்னும் இந்த நாட்டில் புதுமை கால் கொள்ளவில்லை. சீர்திருத்தம் வாயள வில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அத்ற்காக நான் மனம் சோர்வு அடையவில்லை. ஒரு வானம்பாடி மாறிவிட்டான் என்பதாலோ ஒரு சரசுவதி குடும்ப உணர்வோடு மட்டும் ஒன்றிவிட்டாள் என்பதாலோ இந்த நாட்டு எதிர் காலத்தில் நான் நம்பிக்கையை இழக்க வில்லை. பத்திரிகையிலும் சரி இலக்கியப் படைப்பிலும் சரி ஒரு புதுப் பார்வை வேண்டும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. இதுவரை இந்த நாட்டுப் பத்திரிகைகள் எழுத்துகள் தனிமனிதப் பிரச்சனைகளில் ஈடுபட்டு அதையே இலக்கியமாக அமைத்துவிட்டன. அரசியல் சிந் தனைகளும் தனி மனிதர் நல்வாழ்வுக்கே திட்டம் வகுத்தன. நிச்சயமாக இந்த நிலை மாறத் தான் போகிறது; மாற்றத்தான் போகிறோம் என்ற சிந்தனை உண்டாயிற்று. . . என் எதிர் காலத்தை எண்ணிப் பார்த்தேன். 'விமரி சனம்' என் எழுத்தாக அமையப் போகிறது என்பதை உணர்ந்தேன். - அது பத்திரிகையானாலும் சரி கதைப் படைப் பானாலும் சரி அது பொது வாழ்வைப் பற்றிய விமரிசன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/110&oldid=914510" இலிருந்து மீள்விக்கப்பட்டது