பக்கம்:வெறுந்தாள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வெறுந்தாள் மாகத்தான் அமையும். விமரிசனம்தான் இலக்கியம்; இலக் கியம்தான் விமரிசனம் என்ற கொள்கை என்னுள் உருவாகியது. படைப்பு வேறு விமரிசனம் வேறு என்று எண்ணுவது தவறு என்று நினைக்கத் தொடங்கினேன். விமரிசனத்தில் தான் படைப்பே இருக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். தனிப்பட்டவரின் விமரிசனமும் சிந்தனையும் மட்டும் பயன் தராது. சமுதாய பேதங்களுக்குக் காரணம் என்ன என்ற விசாரணையும் வேண்டும். - மக்களை நல்லவர்களாக மட்டும் ஆக்கினால் போதாது. அவர்கட்டு அழகுணர்ச்சி மட்டும் உண்டாக் கினால் தீராது. வாழ்வில் மலர்ச்சியையும் உண்டாக்க வேண்டும். மகிழ்ச்சியும் மனிதப் பிறப்பு உரிமை. அதைப் பங்கிட்டுத் தருவதில்தான் சமுதாயம் முனைய வேண்டும். சமதர்மப் பாதையை வகுப்பதில்தான் இந்தச் சமுதாயத் துக்கு விமோசனம் ஏற்பட இருக்கிறது என்று என்னையும் அறியாமல் ஒரு முடிவுக்கு வந்தேன். நான் தொடங்கப் போகும் விமரிசனம் என்னும் பத்திரிகை இந்தப் பார்வையில் தான் அமையப் போகிறது. சமுதாயத்தின் வரலாற்றைப் புதிய அத்தியாயம் போட்டுத் தொடங்கப் போகிறேன் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. என் மேஜை மேல் வானம்பாடி விட்டுச் சென்ற 'பெண்ணே நீ வாழ்க’ என்ற நூலைப் புரட்டினேன், அதையே என் முதல் விமரிசனப் பொருளாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த எழுத்து வெறும் சொல்லடுக்கு களாகக் காணப்பட்டது. கொள்கைப் பற்று இல்லாத ஒர் எழுத்தாளன் தீட்டிய படைப்பு அது. வெறும் சொற் களாகவே எனக்குப் பட்டன. சொற்கள், சொற்கள் வெறும் சொற்கள். அர்த்த மில்லாத சொற்களாக இருந்தன. இந்தச் சொற்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/111&oldid=914511" இலிருந்து மீள்விக்கப்பட்டது