பக்கம்:வெறுந்தாள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 111 அர்த்தமே இல்லை என்று பட்டது. தொடக்கத்தில் குறிப் பிட்டேனே வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்டேன். வாழ்க்கையில் பொருள் இருக்கிறது. இந்த எழுத்தில்தான் அர்த்தம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 'பெண்ணே நீ வாழ்க’ என்பது வெறுந்தாளாகப் பட்டது அதையே தலைப்பாக வைத்து ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது' என் முன்னால் எழுதுவதற்கு வெறும் தாள்கள் காத்துக் கிடந்தன. பசித்தாளுக்குச் சோறு போடும் வழி வகைகளைத் தீட்டும் கதைத்தாள்களைத் தீட்டுவது என்று முடிவுக்கு வந்தேன். இனி என் எழுத்து வெறுந்தாளாக அமையாது என்பதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. 'வாழ்க நீ எம்மான்' என்று மட்டும் சொல்லிக் கொண் டிருக்க மாட்டேன். 'வாழ்க இவ்வையகம்' என்று தான் இனி எழுதப் போகிறேன். இன்று எழுத்தாளன் ஒரமாக ஒதுங்கிக் கொண்டு வாழ முடியாது. அவன் சமூகத்துக்காகச் சிந்தனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஒய்வு இல்லை. நினைத்துப் பார்க்க நேரம் இல்லை. அவரவர்கள் ஒரு சில கட்டுகளுக்குள் அடங்கிவிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளன்தான் உரிமையாகச் சிந்திக்க முடியும். இன்று எழுத்தாளர்கள் எழுதி ஒய்ந்து விட்டார்கள் போல் காணப்படுகிறார்கள். சரசுவதியைப் போல அவரவர் வாழ்வுப் பிரச்சனைகளில் இறங்கி ஆழ்ந்துவிடுகிறார்கள். வானம்பாடி போல எழுத்து வேறு வாழ்க்கை வேறு என்று இயங்கிவிடுகிறார்கள். இந்நினைவில் ஆழ்ந்த வண்ணம் என் முன்னால் இருந்த 'பெண்ணே நீ வாழ்க’ என்ற கவிதை நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/112&oldid=914512" இலிருந்து மீள்விக்கப்பட்டது