பக்கம்:வெறுந்தாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வெறுந்தாள் 'சரிதான், அது கல்விப் பசியைத் தீர்க்க, அறிவுப் பசிக்கு ஆகாது.” அவள் ஒரு நாவல் பாத்திரமாகக் காணப்பட்டாள். சாதாரண மனுவியாகக் காணப்படவில்லை. அவள் சொல்லுகிறாள் 'மனிதர்களுக்குப் பேசுவதில்தான் சுவை இருக்கிறது. அது சமமான அறிவும் போக்கும் உடையவர் களோடு பேசுவதில்தான் இன்பம் இருக்கிறது. அதற்குத் தான் ரசனை’ என்று பெயர். ரசனை இல்லாத மனிதரை மணந்து கொண்டேன். அவர் டாக்டர்' என்று சொன்னாள். கிடைக்க முடியாத ஒருவர் அவளுக்குக் கணவனாகக் கிடைத்ததைக் கண்டு நான் பெருவியப்பு அடைந்தேன். 'டாக்டரா' என்று மறுபடியும் கேட்டேன். "ஆம், ஏன் அதில் என்ன ஆச்சரியம்?” "க்லியாணச் சந்தையில் அவர்களுக்குக் கிராக்கியா யிற்றே.” தவறான கணிப்பு: நோயாளிக்குத்தான் டாக்டர்; வேண்டும். அவர்கள் எல்லாம் மன நோயாளிகள். சமூகத் தில் சில தவறான நம்பிக்கைகள் கவுரவங்கள். இவற்றை தான் மன நோய் என்று சொல்லுகிறேன். டாக்டரை மணந்து கொண்டால்தான் தங்களுக்குக் கவுரவம், மதிப்பு, வாழ்வு என்று தவறாகக் கணக்கிடுகிறார்கள். அவர்களைத் தான் நான் மன நோயாளி என்கிறேன்.” அவர் ஏன் அவளை மணக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எழாமல் இல்லை. அதற்குள் என் நண்பன் வானம்பாடி வந்தான். அவன் தன் பெயரை வானம்பாடி என்று வைத்துக் கொண்டான். எந்த விதகட்டும் இல்லாமல் அவன் பறக்க விரும்பினான். சுதந்திராமாக வாழ முடியும் என்று நினைத்து வந்தான். அவன் சிரிக்கும் போது மிக அழகாக இருந்தது. கன்னத்தில் குழி விழுந்தது. பொதுவாகப் பெண்களுக்குத்தான் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/15&oldid=914517" இலிருந்து மீள்விக்கப்பட்டது