பக்கம்:வெறுந்தாள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 13 'அப்ப என்னதான் சொல்கிறாய்?" 'அவசரப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டேன். விதவைக்கு வாழ்வு கிடைப்பது அரிது என்று நினைத்துக் கொண்டேன்; சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த மனுஷரை என் கணவன் என்று ஏற்றுக் கொண்டேன்'. “So you regret for this - solo)&mé, Gu(53.5LLG) கிறாயா?” 'அதுவும் சொல்லத் தெரியவில்லை, எனக்கு ஒரு பசி இருக்கிறது.” எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவள் எந்நப் பசியைப் பற்றிப் பேசப் போகிறாள்? தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பசிக்கு என்ன உணவு தேவைப் படுமோ என்று அஞ்சினேன். 'நீ காண்டேகர் நாவல் படித்திருக்கிறாயா?” என்று கேட்டாள். இவளுக்கு என்ன காண்டேகரிடத்து ஒரு மோகம் என்று நிளைக்கத் தொடங்கினேன். 'பசி முன்று வகைப்படும்; ஒன்று வயிற்றுப் பசி, மற்றொன்று காதல் பசி, மூன்றாவது தெய்வீகப் பசி' என்று விளக்கினாள். 'நீ எந்தப் பசியில் இருக்கிறாய்?" 'நான் அறிவுப் பசியில் இருக்கிறேன். அதை அவர் சொல்ல மறந்து விட்டார். மனிதனுக்கு இந்த நான்காவது பசிதான் அதிகமாக இருக்கிறது' என்று சொன்னாள். 'அதற்கு ஏதாவது கல்லூரியில் போய்ச் சேர்ந்து விடலாமே. இப்பொழுதுதான் மாலைக் கல்லூரி நடத்து கிறார்களே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/14&oldid=914516" இலிருந்து மீள்விக்கப்பட்டது