பக்கம்:வெறுந்தாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வெறுந்தாள் கெட்டு அழிவார்கள்; நானும் சிலசமயம் அவர்கள் அழிவுக்குத் துணையாகிவிடுவேன். அதைவிட கெளரவ மாக அந்த ஒரு மனிதனை அழிப்பது நல்லதுதானே'. அவள் சொல்லியது எனக்குப் புதிதாக இருந்தது. 'பின் என்ன? திருமணம் என்பதற்கு வேறு அர்த்தம் என்ன இருக்கிறது. ஒர் ஆடவனின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் அழிக்க இதைவிட வேறு எந்த மருந்தும் கிடையாது. கலியாணம் ஆனவுடன் பெட்டியில் அடங்கிய பாம்பாகி விடுகிறான்' என்று அவள் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சுத்திறனை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நாவலும் கதையும் படித்து அவள் நா இப்படிப் புரண்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன். 'இதோ பாரு! எனக்குப் பொழுது போக வேண்டும். அதுதான் பிரச்சினை' என்றாள். "அதற்குத்தான் கலியாணம் பண்ணிக் கொண் டாயே'. "அதிலே அவருக்குத்தான் பொழுது போகிறது; எனக்கு அதனால் தான் பொழுது போகவில்லை.” இது முரண்பட்ட கருத்தாக இருந்தது. அவருக்கு அதிலே பொழுது போகிறது. “சரசு! நான் இந்தக் காதலிலே என்னை அப்படியே மறந்து விடுகிறேன். உன் நினைவில் என்னை அழித்துக் கொள்கிறேன்.' இப்படித்தான் அவர் அடிக்கடிக் கூறுகிறார். 'நல்லதுதானே' - 'போர், பழைய காலத்து நாவல் டைலாக்கு போல இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/13&oldid=914515" இலிருந்து மீள்விக்கப்பட்டது