பக்கம்:வெறுந்தாள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 11 'சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு அவசியம். எனக்கும் அதைப் போன்ற விளையாட்டுத் தேவைப் பட்டது. அதற்காகத்தான் இந்த இரண்டாம் மணம் செய்து கொண்டேன்' என்றாள் அவள். 'ஆக உனக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு' என்றேன். "வாழ்க்கையே ஒரு விளையாட்டாக இருக்கிறதே தவிர அதற்கு ஏதாவது அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை." 'இருக்கிறது. நீ மற்றொருவனை மகிழச் செய்கிறாயே அதுதான் உன் வாழ்க்கைக்கு அர்த்தம்'. 'நான் அவரிடத்தில் அந்த மகிழ்ச்சியைக் 凸历fT6öT முடியவில்லையே' என்றாள். 'இரண்டு பேரும் சடுகுடு விளையாடினால் அது ஆட்டம். இல்லாவிட்டால் அது வெறும் ஒட்டம்தான்' என்றேன். வாழ்க்கை ஒரு சிலருக்கு ஆட்டமாக இருக்கிறது. சிலருக்கு ஒட்டமாக இருக்கிறது என்பதை அப்பொழுது உணர முடிந்தது. "எப்படியோ ஒடிக்கொண்டிருக்கிறது' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது இப்பொழுது நினைவுக்கு வந்தது. - 'பிடிக்காவிட்டால் நீ ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது' என்றேன். 'அது அவசியம்' என்று பட்டது. பல இளைஞர் களைப் பாழ்படுத்துவதை விட ஒர் இளைஞனை அழிப்பது நல்லது தானே. நான் இரண்டாவது மணம் செய்துகொள்ளா விட்டால் எனக்காக ஏங்கிப் பெருமுச்சு விடும் இனைஞர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/12&oldid=914514" இலிருந்து மீள்விக்கப்பட்டது