பக்கம்:வெறுந்தாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வெறுந்தாள் 'மற்றவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படியாவது அவர்கள் தங்கள் சிற்றின்பத்துக்கு இழுத்துச் சுவை காண விரும்புவார்கள். நான் மறுப்பேன்; அவர்கள் வேதனை அடைவார்கள். என்னமோ நான் அப்படிப் பிறந்துவிட்டேன்'. 'நான் விதவை என்று அந்த மனுஷனிடமும் சொன் னேன்.” - - 'No matter. அதை நான் பொருட்படுத்தவில்லை. அவன் அதிருஷ்டக்காரன் இல்லை என்று என் மாஜி கணவனைப்பற்றிப் பேசினார்.' 'நான் தீர்மானமாகச் சொன்னேன். வாழ்க்கையில் விடுதலை என்பதை அவர் போனபிறகுதான் உணர்ந்தேன்; ஆண்களே வெறும் போர். எப்பொழுதும் அவர் என் அழகைப் பாராட்டுவார். என்னென்னமோ பேசுவார், அந்த உளறல்களைக் கேட்டுச் சலித்து விட்டது. அவசியமில் லாமல் என்னைக் கட்டிப் பிடித்து திடீர் என்று பைத்தியம் பிடித்தது போல நடந்து கொள்வார்; எங்கேயும் போக விடாமல் தடுத்துவிடுவார். சே! Horrible ஏன்டா பெண் ணாகப் பிறந்தோம் என்று ஆகிவிடும்” என்று என் பழைய வாழ்க்கையை எடுத்துச் சொன்னேன். - 'அதிலே இருந்து விடுதலை பெற்றேன்.” மறு படியும் நீங்களும் அதைத்தானே செய்யப் போகிறீர்கள் என்று மறுத்தேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவருக்கு விளங்கவில்லை. 'எல்லாக் கணவன்மாரும் செய்வதைத்தான் நானும் செய்ய முடியும். வேறு என்ன எதிர்பார்க்கிறாய்' என்று கேட்டார். - "என்னை மனிதனாக வாழவிடு, சுருக்கமாகச் சொன் னால் நீ மிருகமாகாதே என்று சொன்னேன்.” அவளுக்கு அந்த இரண்டாம் மணத்தில் விருப்பம் இல்லை. என்றாலும் அவள் தனித்து வாழ முடியாது என் பதை உணாககாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/11&oldid=914509" இலிருந்து மீள்விக்கப்பட்டது