உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 19 ரசனையாகப் படவில்லை. அவர் நோயைப் பற்றித் தான் அதிகமாகப் பேசினார். 'ஒரு கேசு வந்தது. அது ரொம்பவும் 'காம்பிளிகேஷன்'. ஆனால் பீசு பிரமாதம் என்றார்”. அவள் கேட்டுக் கேட்டுச் சலித்து விட்டாள். அவள் ஒரு நாள் மனம் விட்டுச் சொன்னாள். 'நான் உங்களைச் சந்தித்திருந்தால் நீங்கள் தான் என் "Choice" என்று. இப்பொழுது எனக்குத் தெரிந்தது, என் மனைவி. அதாவது என்னை எந்தக் கற்பனைக்கும் செல்லாதபடி தடுக்கும் ரியலிசம் ஏன் இந்த வட்டத்தை விரும்பவில்லை என்பது தெரிந்தது. அவளுக்காக நான் எப்படி இந்த வட்டத்தை விடமுடியும் அவள் விருப்பத்துக்கு நான் அடிபணிந்து விட்டால் அப்புறம் நான் எப்படி ஒரு பத்திரிகை ஆசிரியர் பதவியிலிருந்து விடுபட முடியும். நான் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆசை என்னை உந்தியது. எங்கள் பத்திரிகை உலகத்திலே எழுத்தாளனுக்குத் தனி மதிப்புத் தருகிறோம். அவர்கள் படத்தைப் பிரசுரிக் கிறோம். எங்கள் படத்தை நாங்கள் பிரசுரித்துக் கொள்ள முடிவதில்லை. இந்தச் சின்ன ஆசைக்காவது ஒரு எழுத்தாள னாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எப்படி எழுத்தாளன் ஆவது? எதை எழுதுவது. ஒரு முறைதான் காதலைப்பற்றி எழுத முடியும். அதையே எப்படித் திருப்பித் திருப்பி எழுத முடியும். அதை ஒரு முறை எழுதி அதற்குப் பரிசும் பெற்றுவிட்டேன். வேறு எந்தப் பொருளை எடுத்து எழுதுவது. புதுக் கவிஞன் எடுத்துச் சொன்ன 'ஏழையின் கண்ணிர்' அதை எடுக்க விரும்ப வில்லை. அரசியல்வாதியும் அதைப்பற்றித்தான் பேசு கிறான். அமைச்சர்களும் அவர்களுக்காகத்தான் கண்ணிர் வடிக்கிறார்கள். நல்ல காலம் திரைப்படம் அந்த அளவுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/20&oldid=914522" இலிருந்து மீள்விக்கப்பட்டது