உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வெறுந்தாள் போகவில்லை. அதைக் காட்டினால் யார் பார்ப்பார்கள். 'காஸ்ட்யூம் இருக்காது. எந்த நடிகனையும் முழு ஏழையாக மேக்கப் செய்ய முடியாது. வெயிட்டும் கொழு கொழுப்பும் மிக்கவர்களாக இருக்கிறவர்களை எப்படி அந்தப் பாத்திரங் களாகக் காட்ட முடியும்? துன்பத்தை மறக்க நினைக்கும் திரைப்பட ரசிகர்களுக்கு 'வசந்த மாளிகை'யைக் காட்டி னால் ரசிப்பார்கள். கோடை வெயிலைக் காட்டினால் எப்படிக் காண்பார்கள். 'குளு குளு' தியேட்டர்களில் அந்தப் படம் ஒடாது. இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டே நான் எழுத்தாளனாக உருப்பெறாமல் போய் விட்டேன். பிரபல எழுத்தாளர்களைப் போல மறுபடியும் நான் காந்தியத்தை வைத்து எழுத முடியாது. அப்படி எழுதுவதால் என்ன பயன்? அரைத்த மாவையே அரைப்ப தாகத் தானே முடியும். இல்லை வள்ளுவர் திருக்குறளுக்கு வடிவு கொடுத்து எழுதலாம் என்றால் அதுவும் பலர் எழுதி முடித்து விட்டார்கள். அதனால்தான் இனி எழுதுவதில்லை; நம்மால் முடியாது என்று விட்டுவிட்டேன். எங்கள் பத்திரிகை மிகவும் சிறிய நிறுவனம்தான். என்னை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் பயண அனுபவங்களை எழுதச் செய்யும் அளவுக்கு எங்களிடம் வசதியும் இல்லை. என்னாலும் அது முடியாது. ஒரு வட்டத்துக்குள் பழகி விட்ட எனக்கு எப்படி வெளியே போக முடியும்?. என் மனைவியின் அண்ணன் வீட்டில் ஒரு சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதில் இந்த உலகத்தை அடியோடு மறந்து அவர்கள் வெறும் சீட்டுகளில் 'மணிக் கணக்காகச் செலவு செய் வதைப் பார்த்திருக்கிறேன். அதுதான் அவர்கள் பொழுது போக்கு. இந்தக் காட்சிதான் என் நினைவில் நிற்கத் தொடங்கியது. எங்கள் பத்திரிகைகளுக்கு வந்த கதைகள் இதைவிட எந்த வகையில் மாற்றம் பெற்றிருக்கின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/21&oldid=914523" இலிருந்து மீள்விக்கப்பட்டது