உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வெறுந்தாள் 'அப்படி என்றால் உனக்கு'. 'எனக்கு வாழ்க்கை வெறுக்கவில்லை. அந்தப் புனர் வாழ்விலும் பழைய லட்சியங்களைப் புகுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.” . 'அப்படி என்றால்?” 'மறுபடியும் அதே கொஞ்சல். மறுபடியும் அதே பாட்டு. அதுதான் பிடிக்கவில்லை. ஒரு படி உயர விரும்புகிறேன். அன்பைத் தவிர வேறு எதையும் என் கணவரிடம் எதிர் பார்க்கவில்லை. முதல்நாள் கொஞ்சல். காதல் எல்லாம் பழங்காலத்து இலக்கியத்தின் சாயல். அது மீண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. டாக்டர் அவர் பார்வை வேறு விதமாக இருக்கும் என்று நினைத்தேன். பரிவும் பாசமும் தலையோங்கும் என்று நினைத்தேன்' என்றாள். 'உங்கள் வாழ்க்கையையே ஒரு ரசனைப் பொரு ளாக மாற்றினால்'. 'அதுதான் என் போக்கு. ரசனை இல்லாத வாழ்வு உப்பு இல்லாத ரசம் போல்' என்றாள். 'உம், ரசமும் ரசனையும். இந்தக் கதையைப் பிரசுரித்து இருக்க வேண்டும்' என்று ஒரு கதையைக் காட்டினேன். அந்தப் பிரசுரிக்காத கதையை அவள் எடுத்துக் கொண்டாள். அதைப் படித்துத் தருவதாகச் சொன்னாள். 女 女 女

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/23&oldid=914525" இலிருந்து மீள்விக்கப்பட்டது