பக்கம்:வெறுந்தாள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 23 [2] 'இலக்கிய வட்டம் எங்கள் வீட்டிலேயே கூடுவது. சில சமயம் அவள் வீட்டுக்கும் செல்வது உண்டு. அவள் கணவர் டாக்டர். ஆதலால் என் மனைவியைப் போல அவரிடம் பொறாமை உணர்வு எழுவது இல்லை. 'ஹல்லோ” என்று என்னை அன்பாகவே அழைத்தார். ஒரு டாக்டருக்கும் பண்பாட்டுச் சிகரமாக விளங்கிய என் மனைவிக்கும் வித்தியாசத்தைக் காண முடிந்தது. அவரும் எங்களோடு இருந்து "டீ" குடிப்பார்; நல்ல தோற்றம்; கையில் சிகரெட்டு ஊதுவத்தி போல எரிந்து கொண் டிருக்கும். 'என் wite ஒரு பைத்தியம்' என்று சிரித்துக் கொண்டே பேசுவார். "No அவள் ஒரு Mental patent" என்றார். அதாவது அவர் பார்வையில் அவள் ஒரு மனநோயாளி என்பது soyguñ uoğ8ı'ıl îG. "She must be carefully treated" GTGöTp ffğğ513 கொண்டே பேசுவார். வைத்தியர்கள் மனநிலை மாற வேண்டும்” என்று அவள் சிரிக்காமல் சொல்லுவாள். அப்படி என்றால் 'அவர் பேச்சில் "Fees" என்பது மறையும் பொழுது தான் அவரை நான் மனிதராக மதிப்பிட முடியும்' என்றாள். "எப்படி?” என்றேன். 'நோயைப்பற்றிப் பேசட்டும், Feesஐப் பற்றிப் பேசக் கூடாது. வக்கீல் வழக்கைப் பற்றிப் பேசட்டும் கிளைண்டைப் பற்றிப் பேசக் கூடாது' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/24&oldid=914526" இலிருந்து மீள்விக்கப்பட்டது