பக்கம்:வெறுந்தாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 29 மற்றொரு கதை 'ஆசை, அன்பு, பாசம்' என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. அதாவது இது ஒன்று ஒன்று இல்லாமல் நிலைக்குமா என்ற கருத்தில் அது எழுதப் பட்டிருந்தது. அதை அவள் படித்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் 'வெறும்தாள்’ என் நினைவை விட்டு அகலவில்லை. இந்தச் சமுதாயம் தேர்வில் தோற்றுவிட்டது; வெறும் தாளைத்தான் காட்டுகிறது. தேர்தல்கள் வரு கின்றன; மாறுகின்றன. ஆள்களை மாற்றுகிறார்கள். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத நிலை. அந்த இளைஞன் என்ன செய்ய முடியும்? அவன் கல்லூரியிலும் படித்தான்; படித்துக் கொண்ட நிலையில் அவன் கேட்ட கேள்விதான். எதிர்காலத்தில் தனக்கு நம்பிக்கை இல்லையே என்று எண்ணி எண்ணி அதே கவலையாய் அவன் மனம் மெலிந்துவிட்டது. இரவில் தூக்கமே வருவது இல்லையாம். அதற்கு மேல் கதை தொடர்கிறது. ஒரே பயம் வருகிறது. அலறி எழுகிறான். 'வேலை’ நாளைக்கு என்ன செய்வது என்ற கேள்வியைக் கேட்கிறான். படிப்பிலே சிந்தனை செல்லவில்லை. 'காவிரி தென் பெண்ணை பாலாறு; வளம் மிகுந்த நாடு' என்று தமிழகத்தைப்பற்றிக் கவிதைகளைப் படித்தான். ஆனால் ஏன் தன் வாழ்வில் அந்த வளத்தைக் காணமுடிவில்லை என்று எண்ணிப் பார்த்து மயங்கிவிட்டான். அவனுக்குப் படிப்பே ஏறவில்லை. தேர்வு நாள் வந்தது. அவன் இதுவரை முதல் மார்க்குத்தான் வாங்கி வந்தான். திடீர் என்று அவன் குடும்பத்தில் தந்தை இறந்தார். அவன் மனம் இடியால் தாக்குண்டது. அவன் இதுவரை எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைப் போலக் கனவு கண்டு கொண்டிருந்தான். தன் வாழ்வுதான் இருண்டு கிடக்கிறது என்று நினைத்தான். முடிவில் அவன் தேர்வில் வெறுந்தாளைத் தான் மடித்துக் கொடுத்தான். சமூகம் வழி காட்ட மறுத்துவிட்டது நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/30&oldid=914533" இலிருந்து மீள்விக்கப்பட்டது