பக்கம்:வெறுந்தாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வெறுந்தாள் வதற்கும் சொத்து முடிவதற்கும் சரியாக இருந்தது. இனிக் கடன் வாங்கும் படலத்தில் அவன் குடும்பக் கதை இடம் பெற்றது. பாவம் அந்தச் சிறுவன் என்ன செய்ய முடியும்? இரண்டு தமக்கையர், ஒரு தாய்; மூன்று பெண்கள், இந்த உலகத்தில் வயிற்றைப் பிறர்க்குக் காட்டாமல் கைகளால் உழைத்துச் சாப்பிட வேண்டும். 'சுவர் இல்லாத சித்திரங் கள்; அதுதான் மானம் மிக்க வாழ்க்கை. அந்த வாழ்க்கை யைப் படைத்துக் கொடுக்க உதயமாகும் சிற்பியாக அவன் இருந்தான். பிறக்கும் போதே அரசுமுடி' அவனுக்குக் காத்துக் கிடந்தது. பட்டம் பெற முயன்றான். அதுவும் முடியாமல் போய்விட்டது. அந்தக் குடும்பத்தின் கனவு, கற்பனை, நம்பிக்கை எல்லாம் கரைந்துவிட்டன. சமுதாயம் அவனுக்கு ஒரு கேள்விக் குறியாக அமைந்துவிட்டது. அது பதில் சொல்லாமல் வெறும் தாளை மடித்துக் கொடுத்தது. 'வெறுந்தாள்' என்ற தலைப்பு அக்கதைக்குப் பொருத்தமாக இருந்தது. இன்னும் அதில் பல விவரங்கள் இருந்தன. பாத்திர வருணனைகள் இருந்தன. அதனால் அது ஒரு கதை என்ற வடிவம் தரப்பட்டிருந்தது. 'வெறும் தாள்' என்ற தலைப்பு உடைய அந்தக் கதை பிரசுரிக்க முடியாத கதையாகத் தள்ளப்பட்டது. "அதை வாசகர்கள் ரசிக்கமாட்டார்கள்' என்பது அந்த மானேஜரின் முடிவு. அதில் எந்தவிதக் காதலும் இல்லா விட்டால் யார் அதைப் படிக்கப் போகிறார்கள். தமிழ்க் கதை என்றால் அதில் காதல் முக்கியமான இடம் பெற வேண்டும் என்பது மானேஜரின் உத்தரவு. 'அவன் ஏன் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கு கிறான். வாழ்க்கையில் பெறமுடியாத காதலை எழுத்தில் பெறத்தான்' என்பார். வாசகனைத் திருப்திப்படுத்தும் அமிசம் இருக்க வேண்டும் என்பது மேல் இடத்து உத்தரவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/29&oldid=914531" இலிருந்து மீள்விக்கப்பட்டது