பக்கம்:வெறுந்தாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 27 விரும்புகிறான்? மிக உயர்ந்த உணர்வுகளை எழுப்ப வேண்டும் அல்லது நரம்புகளைத் தட்டி எழுத்தாளன் வீணை வாசிக்க வேண்டும். அவள் அந்தக் கதையைப் படித்தாள். 'அவன் ஒரு குருடன் கதை சோகத்திலே தொடங்கியது. பிறகு மேலும் தொடர்ந்து படித்தாள். 3. என் வீட்டு நினைவு வந்தது. 'நீ எங்கே போனாய்' என்று கேட்பாள். 'ஏன் இவ்வளவு நேரம்” என்று கட்டாயம் கேட்பாள். நாகரிகமாக 'நான் கிளப்புக்குப் போனேன்; நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண் டிருந்தேன்” என்று எப்படிச் சொல்ல முடியும். அந்த மனோ நிலை எனக்கு இல்லை என்பதை அவள் அறிந்தது தானே. நான் சரசுவதியின் கோயிலில் இலக்கிய விமர்சனம் செய்து கொண்டிருந்தேன் என்றால், அந்த வழிபாட்டை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள். கோயிலுக்கு நான் போகமாட்டேன் என்பது அவளுக்குத் தெரியும். அவளுக் காகவே நான் துணையாகப் போவது உண்டு. அதற்குமேல் எனக்கு அங்கே கவர்ச்சி இல்லை என்பதை அவள் அறிந்திருக்கிறாள். 'உனக்கு என்ன தெரியும்; படித்து இருக்கிறாயே தவிர ஞானம் ஏது?’ என்று கேட்டிருக்கிறாள் என் மனைவி ஞானம், அவளுக்கு அந்தப் பெயர் எப்படி வைத்தார்களோ தெரியாது. சுதந்திரமாக வாழ முடியாத வாழ்க்கை உடை யவர்களுக்குச் சுதந்திரன்’ என்ற பெயர் வைத்தது போல அவளுக்கு அந்தப் பெயர் வைத்தார்கள். ‘சுதந்திரன் அது மற்றொரு கதை. அவன் பிறக்கும் போதே தந்தையே இழக்கவில்லை. அவனோடு முன் பிறந்தவர்கள் இரண்டு தமக்கைமார்கள். அந்தக் குடும்பம் நிம்மதியாக இருந்தது. அவன் வளர்கிற வரைக்கும் குடும்பச் சொத்து முழுவதும் கரையாமல் இருந்தது. படிப்பு முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/28&oldid=914530" இலிருந்து மீள்விக்கப்பட்டது