பக்கம்:வெறுந்தாள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வெறுந்தாள் 'அடிக்கடி அவருக்குக் கோபம் வருகிறது. iritation (எரிச்சல்) அதிகம். அதாவது முள்ளில் சேலையைப் போட்டால் எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுவார்களே அதுபோல் அவருக்கும் எனக்கும் பிணைப்பு ஏற்பட்டது. கவர்ச்சி அவர் கண்ணை மயக்கிவிட்டது. சின்னக் குழந்தைக்குப் பொம்மையைக் கண்டால் அது வேண்டும் என்று அடம் பிடிக்கும். பிறகு அதைக் கொஞ்ச நேரத்துக் கெல்லாம் உடைத்தால் தான் திருப்தி” என்றாள். வாழ்க்கைப் பிரச்சனையைவிட இலக்கியப் பிரச் சனைதான் எங்களுக்குச் சுவை தந்தது. அந்தச் சிறு கதையைப் படித்தாள். அழகான வாக்கியங்கள். கருத்துக்கு அதில் சொல் இல்லை; உணர்வுக்குத்தான் சொற்கள் இருந்தன. இலக்கியப் படைப்பின் இரகசியம் அப்பொழுது தான் புலப்பட்டது. கருத்துகளை வைத்து இலக்கியம் எழுதிவிட்டதாகக் கூறுபவர் சிலர் உள்ளனர். அதையே பாராட்டிப் பேசும் பைத்தியங்களையும் பார்த்திருக்கிறேன். கருத்து வேறு; சிந்தனை வேறு. கருத்துகள் சொந்தம் அல்ல; இரவல், சிந்தனை சொந்தம், கதைகளில் சிந்தனை இடம் பெறலாம்; கருத்துகள் இடம் பெறுவதால் அதற்கு மதிப்பு இல்லை. அவள் படித்த அந்தக் கதையில் உணர்வு ஒட்டம் இருந்தது. சிந்தனை ஊடுருவிச் சென்றது. இதை ஏன் ஒதுக்கிவிட்டோம் என்று எண்ணிப் பார்த் தேன். நாங்கள் பத்திரிகை வாசகர்களை மனத்தில் வைத்து எதையும் எடைபோட வேண்டியுள்ளது. இன்றைய வாசகர் கள் யார்? சாதாரண வாசகர்கள். அதாவது பழகிப் போன சம்பிரதாயத்தில் ஊறிப்போன ஒற்றையடிப் பாதைகள்; அல்லது மிக வேகமாகப் பறக்கின்ற விமானப் பயணிகள், அதாவது பழகிய கருத்துகள் இருக்க வேண்டும். இல்லா விட்டால், நம்பமுடியாத கற்பனைகளைக் கொண்டு இயங்க வேண்டும். நடைமுறை வாழ்க்கையை எழுதி வாழ்க்கையை உணரச் செய்யும் முயற்சியை எந்த வாசகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/27&oldid=914529" இலிருந்து மீள்விக்கப்பட்டது