உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 31 டாக்டர் இருக்கும் போது அவர் கேட்டார். "What do you find in literature? (இலக்கியத்தில் என்ன காண்கிறீர்) அது வெறும் ஏமாற்றம் தானே என்று கேட்டார். நீங்கள் உங்கள் நேரத்தை வீண் பிரச்சனைகளில் செலவு செய்கிறீர்கள். This is my opinion". (இது என் கருத்து) என்றார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் போன பின்பு சிந்தித்துப் பார்த்தேன். அவள் அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினாள். 'அதுதான் அவருக்கும் எனக்கும் வேறுபாடு. வாழ்க்கையின் விமரிசனம் தான் இலக்கியம். நாம் வாழ்ந்து கொண்டே இருக்கிறோம். அதில் எது நல்லது எது கெட்டது என்பதைப் பற்றி ஆராய் கிறோம். நல்லது நினைக்க வேண்டும் என்று நினைக் கிறோம்; இதுதான் இலக்கியம்' என்று சொன்னாள். வானம்பாடி குறுக்கிட்டான். 'இலக்கியம் அப்படி இருந்தால் பரவாயில்லை. அதை வெறும் வாழ்க்கைக் கண்ணாடியாக அமைக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி வருணிக்கிறார்கள். அழகிய சித்திரம்தான். சித்திரம் ஒவியம் ஆகும்; ஒவியம் சித்திரம் ஆகாது என்றன். ஒவியம் இலக்கியமாகாது. ஒவியம் வேறு; சித்திரம் வேறு' என்றான். அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 'வாழ்க்கையை ஒரு சித்திரமாகக் காண முயல்வதுதான் இலக்கியம். சிதைந்து கிடக்கின்ற அழகுகளை ஒருங்கு சேர்த்துக் காண்பதுதான் இலக்கியம். ஒவ்வொன்றிலும் அழகு இருக்கிறது. சாவு ஒன்றில்தான் அழகு இல்லை. அதுகூட இயற்கை இந்த உலகத்தைத் தூய்மைப் படுத்துவதற்குச் செய்யும் முயற்சி. உலர்ந்த சருகுகள் கீழே விழாமல் எப்படி இருக்க முடியும். தீயது அழிய வேண்டும். அழுகல் ஒழிய வேண்டும். இது இயற்கையின் நியதி, சட்டம்; ஒழுங்கு. அதுதான் படைப்பு என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/32&oldid=914535" இலிருந்து மீள்விக்கப்பட்டது