உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வெறுந்தாள் "தீமை ஒழிய வேண்டும். அதைவிட தீமைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றாள் சரஸ்வதி. - அந்த வீடு அழகான வீடு. சுற்றிலும் ஒரு அழகான தோட்டம் இருந்தது. பங்களா என்று சொல்ல முடியாது. இப்பொழுது எழுகின்ற type வீடுகளில் ஒன்றுதான். 'ஏ' டைப் வீடு என்று சொல்ல முடியாது. 'சி' டைப் தான். இப்படித்தானே அங்கே வீடுகளைப் பகுத்துக் காண்கிறார் கள். இன்னும் 'டி' டைப் இ டைப் வரையில் இருந்தது. ‘எப் typeல் இல்லை. F type என்றால் fail என்று தானே அர்த்தம். அந்த அளவு அங்கே வீடுகள் எழவில்லை. அங்கே வாழ்பவர்கள் வீடு E type வரை இருந்தது. தோல்வி என்பதைக் காணாத வீடுகள்தான் அங்கே இருந்தன. வெறுந்தாள் கதைப் பாத்திரமாக வரும் சுதாவைப் போல் அவர்கள் வாழ்க்கை அமையவில்லை. அவன் வாழ்க்கை F type எனப் பாகுபடுத்திக் காண முடிந்தது. அவன் படிப்பு வேறு; வாழ்க்கை வேறு என்பதை உணர்ந் திருக்க வேண்டும். இனிமேல் படிப்பை நம்பி மனிதன் வாழ முடியாது என்ற நிலைக்கு நாடு வந்துவிட்டது. படிப்பு ஒரு கண்ணா மூச்சு விளையாட்டு. அவ்வளவுதான். கண்களைக் கட்டிவிட்டு யாரையாவது பிடித்துக் கொள் என்று ஒடவிடுவதுதான் இன்றைய படிப்பு முறை. அதிருஷ்டம் தக்க ஒரு ஆளைத் தொடுவது. பெரும்பாலும் தகாத ஆளைத் தொடுவதுதான் அந்த விளையாட்டின் முடிவு என்று எண்ணிப் பார்த்தேன். இதை மனதில் எண்ணிக் கொண்டேன். அந்த உருவகத்தைப் பற்றி மட்டும் விமரி சனப் பொருளாக வைத்தேன். - வானம்பாடி ஆகா பிரமாதம் என்று கூறினான்! வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சு விளையாட்டு என்ற பொருள் பற்றி ஒரு கவிதை எழுதித் தருவதாகச் சொன்னான். கவிஞன் கற்பனை எப்படிச் செல்கிறது என்று வியந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/33&oldid=914536" இலிருந்து மீள்விக்கப்பட்டது