உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெறுந்தாள் 'மற்ற பத்திரிகைகள்?" 'இப்போ துணுக்குகளுக்குத்தான் காலம்; கலைக் கல்ல' என்று என் அனுபவத்தைக் கொண்டு சொன்னேன். 'அது சரி, யாருக்கு இப்ப பொறுமை இருக்குது?' 'அது உனக்கு இல்லை. அது எனக்குத் தெரியும். அதன் அர்த்தம் எனக்குத் தெரியும்.' "எங்கள் பொறுமையைச் சோதிக்கிற வரையும் எழுதினால் யாரால் படிக்க முடியும்' என்று கேட்டாள். சாதாரண சராசரி வாசகர்களுள் ஒருவராக என் மனைவியை மதித்தேன். ஆனால் அவள் ஒரு நாள் கூட துணுக்கைப் படிக்கமாட்டாள். அதுவும் எனக்குத் தெரியும். அவள் சீரியஸ் டைப். அவளுக்கு தமாஷே பிடிக்காது. "அதைப் பற்றித்தான் நினைக்கிறேன். கதையைப் போட்டு இந்த வாரத்துப் பத்திரிகையை ஒட்டலாமா இல்லே துணுக்குகளே வைத்து நிரப்பலாமா. அதுதான் யோசிக் கிறேன்' என்றேன் என்றாள். "ஐயோ துணுக்கரசே? பல்கலைக் கழகத்தில் ஒப் பாரியைப் பற்றி ஆராய்ச்சி. தெருக்கூத்தைப் பற்றி ஒரு சொற்பொழிவு. இதுதான் இன்றைய துணுக்கு. 'சில பேர் ரொம்பவும் எளிமையாக விளம்பரம் ஆகிவிடுகிறார்கள்; தெரியுமா? ஒரு பிரபல இலக்கியவாதி இருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகம் பேசத் தெரியாது. அவர் திடீரென்று யாரைப் பற்றியாவது அபூர்வ செய்தி யைச் சொல்லுவார். அமெரிக்காவிலே இந்திய இட்டலிக்கு அமோக வரவேற்பு’ என்று எங்காவது சொல்லி வைப்பார். உடனே அவருக்கு ஒரு போட்டோ. அவர் பேசிய இந்த அபூர்வ செய்திக்கு விளம்பரம். அவர் ஒரு பேராசிரியர். இப்படி எளிதாக விளம்பரத்துக்கு ஆளாகிற எழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/41&oldid=914548" இலிருந்து மீள்விக்கப்பட்டது