பக்கம்:வெறுந்தாள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tा. ॐ 41 தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை அவள் எடுத்துச் சொன்னாள். 'உடனே அதுக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்புவார். வை.மு.கோ. சட்னி. இல்லாமலே இட்டலி சாப்பிடுவார். அதை நேரில் பார்த்தேன் இதை வெளி யிட்டவர் முருகவேள். அவருக்கு ஒரு படம். 'இதுதானே நம் துணுக்குகள்' என்று அவற்றுள் ஒன்று இரண்டு படித்துத் தன் விமரிசனத்தைத் தந்தாள். 'பெண்கள் பகுதி என்று ஒரு சில பத்திரிகைகள் ஒதுக்கி இருக்கிறார்கள். சமையலிலே இருந்து ஆசனம் செய்வது வரை எழுதுகிறார்கள்.' 'அதுதான் எழுதுவார்கள். பத்திரிகை என்றால் அது சும்மா பொழுது போக்குதானே' என்று என் அபிப் பிராயத்தை அவளிடம் சொன்னேன். "ஆமாம் நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள்?” அதாவது விமரிசனம்' என்ற பகுதியைத் தொடங் கலாமா என்று பார்க்கிறேன். 'அதற்கும் இந்தச் சச்சுவுக்கும் என்ன சம்பந்தம்?” 'அவள் எங்கள் பத்திரிகையின் சந்தாதார். அதாவது அவள் கட்டுகிற காசுதான் வடிகட்டி நமக்குச் சம்பளமாக வருகிறது. இப்படிப்பல சந்தாதார்கள் சேர்ந்துதான் எங்கள் பத்திரிகை நடக்கிறது.' 'பிரபல பத்திரிகைகள் தானாகக் கடைகளில் விற் பனையாகிறதே". 'அவை எல்லாம் வளர்ச்சி பெற்ற பத்திரிகைகள்; நாங்கள் எல்லாம் சும்மா ஒடினால் போதும்; அவ்வளவு தான்'. 'நீங்களும் ஏன் அப்படி அதைப் பிரபலப்படுத்தக் கூடாது?'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/42&oldid=914549" இலிருந்து மீள்விக்கப்பட்டது