உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 43 'வாழ்க்கையையும் படித்து இருக்கிறாள்.' 'அவள் விதவை; அதனால் அது அவளுக்கு அறுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் அவள் தன் கணவனை விமரிசிக்கிறாள்.' - 'நீ என்னை நேரில் விமரிசிக்கிறாய். அவள் மறை வாகச் செய்கிறாள். அதுதான் வேறுபாடு' என்றேன். 'பின்னதுக்குப் புறங்கூறுதல் என்று பெயர்'. 'அதுதான் நாகரிகம். முன்னால் பேசிக் கண்டிப்பதை விட மறைவாகப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது தானே' அவளுக்கு ஒருத்தி தன் கணவனைக் குறை கூறுவது பிடிக்கவில்லை. 'குறை இருந்தால் சொல்லித்தானே ஆகவேண்டும்'. 'அதை உங்கள் இலக்கியத்தில் வைத்துக் கொள்ளுங் கள். குடும்பத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது'. 'வாழ்க்கைக்கு உதவாதது இலக்கியத்துக்கு மட்டும் எப்படிப் பயன்படும்?' 'அப்பொழுது விமரிசனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' 'பத்திரிகையின் புதிய அம்சம் அதுதானே.” 'இப்பொழுது சினிமாவிலே வரும் பாடல்களை விமரிசனம் செய்கிறார்களே பார்த்திருக்கிறாயா?” 'பார்த்திருக்கிறேன்; சில திரை விமரிசகர்கள் மார்க்குப் போடுகிறார்கள்'. "அதைப் பற்றி என்ன சொல்லுகிறாய்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/44&oldid=914551" இலிருந்து மீள்விக்கப்பட்டது