பக்கம்:வெறுந்தாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வெறுந்திாள் 'அவர் எப்பொழுதாவது வாத்தியாராக இருந் திருப்பார்” 'அது சரி; அது நல்லதா கெட்டதா?” 'பின் நோக்கிச் செல்லுகிறோம் என்றுதான் கூற வேண்டும். காரண காரியத்தோடு சொல்லி விளக்க வேண் டிய செய்தியைக் கணக்கில் காட்டுவது சுவையைக் குறைக்கிறது'. 'இது புதுமை தானே?” 'வெற்றி தோல்வியைப் பற்றி யார் இவர்களைக் கேட்டார்கள்? படம் விமரிசனம் செய்யப்பட வேண்டும் மார்க்குப் போட இது என்ன தேர்வா என்ன?” “தேர்வா என்ன?' என்ற கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. அந்த வெறுந்தாள் கதைப் பாத்திரம் சுதா ஏன் தேர்வில் தோல்வி அடைந்தான்? அவனுக்கு எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் எழுந்துவிட்டது. பழமையைப் பற்றிச் செய்யும் விமரிசனம் போலவே, எதிர்வைப் பற்றி அஞ்சுவதும் வீண் என்று பட்டது. நிகழ்காலம் என்ன பாலா ஒடுகிறது. எதிர்வைப் பற்றி அஞ்ச. அவன் அச்சம் நியாயம் தான். நாட்டிலே தக்க திட்டங்கள் தீட்டப்படவில்லை. இளைஞர்களைச் சமூக சேவை செய்ய அனுப்பு கிறார்கள். முதலில் அவர்களுக்குச் சேவை செய்ய இந்தச் சமூகம் முன் வரட்டும்; அவர்கள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்ட எந்தத் திட்டம் உருவாகி இருக்கிறது? - வைத்தியப் படிப்பே இன்று நம்பிக்கை தரவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை இல்லை. அவர்கள் இதுவரை மணச்சந்தையை நம்பிக் கொண்டு இருந்தார்கள். இந்த வேலை நிறுத்தத்துக்குப் பிறகு அதுவும் மூடப்பட்டுவிடும். அவர்களுக்குத்தான் வேலை உறுதி என்ற நம்பிக்கை இருந்தது. அதுவும் இல்லை என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/45&oldid=914552" இலிருந்து மீள்விக்கப்பட்டது