பக்கம்:வெறுந்தாள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 45 அவர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள். இனி மணச்சந்தை யிலும் அவர்களுக்கு மவுசு குறையத்தான் போகிறது. அவர்கள் கதியே இந்த நிலை என்றால், 'கலை என்ற பேரால் பட்டம் வாங்கும் சுதாவுக்கு மட்டும் என்ன எதிர் காலம் இருக்கிறது? அவன் கையில் பெறப்போகும் சர்ட்டிபிகேட்டும் வெறும் தாள்தானே? அழகாகப் படம் போட்டு வைக்கலாம். அதாவது அதற்காக உழைத்து வீண் படுத்திய நாட்களை எண்ணிப் பார்க்க உதவும். சில வீடு களில் கருப்பு அங்கி அணிந்து பட்ட விழாப்படம் எடுத்து வைக்கிறார்கள். இனி அந்த உடை வெறும் 'ஒரு நாள் வேஷம் தான் என்ற உணர்வைத் தவிர வேறு எதை நினைவூட்டப் போகிறது? அந்தக் கதை எழுதியவன் மாணவர்களோடு நெருங் கிய ஒருவனாகத்தான் இருக்கவேண்டும். கல்லூரி வாழ்வில் ஒரு அவல உணர்வை எழுப்பும் கதையாகத் தீட்டினானே அதைப் பாராட்ட வேண்டியது. 'ஒரு பிறவிக்குருடன் என்ற கதை எழுப்பிய சோகத்தைவிட இதுதான் மிக்க சோகத்தை எழுப்புகிறது. அவன் பிறவிக் குருடன், இவன் வாழ்க்கைக் குருடன். படிப்பில் வெற்றி பெறாததால் அவன் வாழ்வில் ஒளியைக் காண முடியவில்லை. ஒளியைக் காணாதவன் குருடன் தானே. அந்த ஒரு குருடன் என்ற கதையைவிட இது மேலாகப் பட்டது. அந்தக் கதையை வெளியிடுவதால் என்ன பயன்? சாதாரண உணர்வைத் தான் எழுப்புமே தவிர எந்தப் பிரச்சனையையும் இது எழுப்பாது. நான் நினைத்துப் பார்க்கிறேன். உழைப்பின் அடித் தளத்தில் கல்வியைப் பற்றி எண்ணாத கருமான் மகன் இப்படிக் கலங்கி இருப்பானா இரும்பை அடித்து நீட்டி வளைப்பானே தவிரத் தோல்வி என்று ஒப்பாரி வைத்து இருக்கமாட்டான். என்ன செய்வது என்ற ஒப்பாரியின் ஒலம் அந்த இளைஞன் எழுப்பினான். அதுதான் வெறுந் தாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/46&oldid=914553" இலிருந்து மீள்விக்கப்பட்டது