உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வெறுந்தாள் வெறுந்தாள் என்ன விடைத்தாளையே தரட்டுமே. அது வினாத்தாளுக்கு விடையாகுமே தவிரப் பசித் தாளுக்கு அது சோறு போடுமா? பசித்தாள் பசித்தாள்தான்; 'ஈன்றான் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. இந்தக் கட்டுப்பாடு பயங்கரமானது; திருடக்கூடாது; அள்ளக் கூடாது; பிறரிடம் கொள்ளக் கூடாது. ஒப்புக் கொள்கிறேன். வாழ்க்கையை எள்ளக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும். எள்ளினால் தான் வாழ்க்கையின் பள்ளம் இந்தச் சமூகத்துக்குத் தெரியும். மேடுகளைப் பார்த்துப் பழகிவிட்ட இந்தச் சமுதாயம், அதன் கேடுகளை எப்பொழுது எண்ணப் போகிறது. அதை எண்ணிப்பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது. இனித் தனி மனிதனைப் பற்றி விமரிசனம் கண்ணுக்குத் தெரியட்டும். தனி மனிதனைப் புகழ்வது எவ்வளவு கெடுதியோ அப்படித்தான் தனிமனிதரை இகழ்ந்து கொண்டு இருப்பது. சமுதாயச் சிந்தனையை மாற்றுவதற்குத்தான் இந்தக் காந்திய வழிபாடும் தனி மனிதரின் நிந்தனையும், இரண்டு பக்கமும் மக்களைத் திருப்பிவிட்டால் சமுதாயத்தைப் பற்றிய எண்ணம் விமரிசனம் எதுவும் தோன்றாது. அரசியல்வாதி நிம்மதியாகக் காலம் கடத்த முடியும். வந்தனையும் நிந்தனையும் திசை திருப்பும் வழிகள் என்று நினைத்துக் கொண்டேன். இவற்றை வெளியே சொன்னால் தானே இது அரசியல்; உள்ளே நினைத்துக் கொள்ளக் கூடவா எனக்கு உரிமை இல்லை. பகிரங்கமாக எங்கள் பத்திரிகையில் இதை எழுத முடியுமா? எழுதுவதற்கு இது என்ன அரசியல் பத்திரி கையா என்று எங்கள் உரிமையாளர் கேட்பார். அதாவது எங்களுக்கு உரிமை தர மறுக்கும் பத்திரிகையின் சொந்தக் காரர் கேட்பார். 'குடும்பப் பத்திரிகை அளவில் நிறுத்திக் கொண்டால் போதும். அரசியல் எழுதி அம்பதாயிரம் ஒடு வதைவிட அரிசி இயல் எழுதி ஐயாயிரம் ஓடினால் போதும் என்பார். அதாவது அரிசி இயல் என்பது குடும்பத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/47&oldid=914554" இலிருந்து மீள்விக்கப்பட்டது