பக்கம்:வெறுந்தாள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tा. # 47 பற்றி எழுதுவது போதும் என்கிறார், குடும்பப் பத்திரிகை' என்றுதானே நாங்கள் விளம்பரப் படுத்துகிறோம். இதுவரை 'சமூகப் பத்திரிகை என்று வெளியிட யாரும் முன்வர வில்லை. இன்னும் சமூக உணர்வு இந்த நாட்டில் வளரவில்லை. அந்தச் சமூக உணர்வு வளரும் பொழுதுதான் அரசியல் திருந்தும். அது மக்களுக்கு உண்மையில் பயன்படும் என்று எண்ணத் தொடங்கினேன். இன்னும் எந்தக் கதையைப் பிரசுரிப்பது என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை. பிறவிக் குருடன் சிறந்த கதையா, 'வெறுந்தாள் சிறந்த கதையா என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை. எதிர்பார்த்த விதமே சரசுவதி அன்று மாலை எங்கள் வீட்டுக்கு வந்தாள். எங்கள் வீட்டு முன்னறை எனக்காகவே ஒதுக்கப்பட்டு இருந்தது. நான் பாதி எழுத்தாளன்; பாதி பத்திரிகை ஆசிரியன் அல்லவா. அதனால் எனக்குத் தனி அறை வேண்டியிருந்தது. வக்கீல் வீடுகளில் இப்படி முன் புறம் கிளைண்டுகளுக்காகவே விடப்பட்டிருக்கும். அவர் களை மருட்டுவதற்காகவே பொன்னொளிர் மேனியை உடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். எனக்குக் கூட அதைப்பற்றி ரொம்பநாள் தெரியாது. இதை எல்லாம் இவர்கள் படித்துத்தானே வக்கீல் ஆகி இருப்பார்கள் என்று நினைத்ததுண்டு. பின்னால்தான் தெரிந்தது. அவை புரட்டிப் பார்ப்பதற்கு; விவரங்கள் தீர்ப்புகள் முன் நிகழ்ச்சிகள் விளக்கங்கள் விவாதங்கள் இவற்றை "லாஜர்னல்கள்' என்று சொல்லுகிறார்கள். அது அந்த அறைக்குத் தனி அழகு. புட்டிகள், மாத்திரைகள், மருந்து விளம்பரங்கள் இதெல் லாம் டாக்டர் வீட்டுக்கு அழகு. பிரசவ மருத்துவ இல்லமாக இருந்தால் குழந்தைகளின் படங்களை மாட்டி வைக்கிறார் கள். வாத்தியார்களாக இருந்தால் பையன்கள் கட்டுரைப் புத்தகங்களும் விடைத்தாள்களும் சிதறிக் கிடக்கும். வியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/48&oldid=914555" இலிருந்து மீள்விக்கப்பட்டது