பக்கம்:வெறுந்தாள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வெறுந்தாள் "அவள் ஒரு பெண் ஆச்சரியமாக இருந்தது அந்தக் கதையின் தொடக்கம். அவள் வேறு என்னவாக இருக்க முடியும்? என்றாலும் அதையும் ரசிக்க முடியாமல் இல்லை. அவளுக்குக் காதல்’ என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை யாரைக் கேட்டாலும் அதற்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை' சட்டென்று படிப்பதை அவள் நிறுத்தினாள். 'ஏன் அவளுக்குத் தெரியவில்லை என்று எழுதி இருக்கிறது. யாருக்குத்தான் தெரியும்' என்று சரசு கேட்டாள். 'ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழமுடியாது” என்றான் வானம்பாடி. 'உண்மைதான். நான் அவரை வெறுத்தாலும் அவர் இல்லாமல் நான் வாழ முடியாது; அப்பொழுது அவரிடம் காதல் இருக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொன்னார். அவர் வெளிப்படையாகச் சொன்னதால்தான் எனக்குத் தெரிந்தது. வேறு எப்படி எனக்குத் தெரிய முடியும்?” அதற்கு மேலும் கதையைப் படித்தாள். 'அதனால் யாரையாவது காதலிப்பது என்று தீர் மானித்தாள்'. இது ஒரு நகைச் சுவைக் கதையாக இருந்தது. பிறகு போகப் போகச் சீரியசாகப் போய்விட்டது. அவள் உண் மையிலேயே ஒரு ஆளிடம் காதல் கொண்டு விட்டாள். சும்மா அதைப் பரிட்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். அது நிஜ வாழ்க்கையாகவே ஆகிவிட்டது. இதைப் படிக்கும் போது எனக்குப் பழைய பாரதக் கதை கவனத்துக்கு வந்தது. குந்திதேவி துருவாச முனிவர் ஒரு மந்திரத்தைக் கற்றுத்தந்தாராம். அந்த மந்திரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/53&oldid=914561" இலிருந்து மீள்விக்கப்பட்டது