உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 53 உபதேசித்து நீ யாரை நினைக்கிறாயோ அவன் உன் ஆம்படையானாக வந்து நிற்பான். ஆம்படையான் என் றால் அடுத்த கதை குழந்தைதானே. அவன் உனக்குக் குழந்தை வரம் தருவான் என்று உபதேசித்தாராம். 'அது உண்மையா பொய்யா என்று பரிட்சித்துப் பார்க்க விரும்பினாளாம். யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் அதை மந்திரித்தாளாம். சூரிய மந்திரத்தைச் சொன்னாளாம்; சூரியனே நேரில் ஒரு அழகிய யுவனாக வந்து நின்றானாம். அவன் ஒளி அவள் கண்களைக் கவர்ந்தது. அவன் உடனே அவளை டெம்பரரியாகக் காதல் கொண்டு ஒரு காதல் மகனையும் தந்து சென்றுவிட்டானாம். இது பழைய கதை. அதேபோல அந்த அவள் ஒரு பெண் கதை சென்றது. அவள் ஒருவனைக் காதலித்துவிட்டாள். அந்தக் காதல் மூன்று நிலைகளைப் பெற்று இருந்தன என்று தெரிந்து கொண்டாளாம். ஆசை, அன்பு, பாசம். இந்தப் பாசம் என்ற நிலையில் அவள் நின்று விட்டாளாம். அதற்கப்புறம் அவளுக்கு அதுவே பிரச்சனையாகி விட்டது. அப்புறம் பிரிவு என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். எப்படியாவது அவனைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் முக்கியமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை வருமாம். அப்பொழுதுதான் அவள் ஆசை என்பது என்ன என்பதைத் தெரிந்து கொண் டாள். ஆசை என்பதற்கு அதற்கு முன்னால் அவளுக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது. அந்த ஆசை நிறை வேறியதும் இரண்டு பேரும் இணைபிரியாமல் பழகினார் களாம். அதை என்ன என்று சொல்வதென்றே தெரிய வில்லையாம் அப்பொழுது அவள் உள்ளம் மலர்ச்சி பெற்றதாம் அதைத்தான் அவள் அன்பு என்று பேசத் தொடங்கினாளாம். பிறகு ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாமல் வேதனைப்பட்டார்களாம். அதுதான் பாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/54&oldid=914562" இலிருந்து மீள்விக்கப்பட்டது