உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 55 "இவற்றையெல்லாம் ஏன் தள்ளி விட்டீர்கள்?' கேட்டது சரஸ்வதி. 'யார் இதைப் படிக்க முடியும்?” "படிக்க மாட்டார்களா?” 'உண்மையைச் சொன்னால் பிறகு நீங்கள் கதையே அனுப்ப மாட்டீர்கள். ஒரு நாளைக்கு ஐம்பது கதைகள் தபாலில் வரும். அதை யார் படிப்பது? எப்படிப் படிப்பது? யாராவது சிபாரிசு செய்தால் அப்பொழுதான் ஒரளவு の "労 கவனித்துப் பார்க்க முடிகிறது? 'யாராவது சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் • * > அதைக் கொஞ்சம் கவனிப்போம்'. 'வாங்க டாக்டர்' என்று அவரை வரவேற்றேன். 'இதுதான் உங்கள் வட்டமா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். என் அறையில் ash trary வைக்கவில்லை. அது இது வரை தேவைப்படவில்லை. அதனாலேயே அவர் சிகரெட்டைப் பற்ற வைக்க வில்லை. எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. 'நீங்கள் சிகரெட்டுப் பிடிக்கலாம்' என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குகள் நிறுத்திக் கொண் டேன். அது கெட்ட பழக்கம் என்று சின்ன வயதிலிருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் அதிகம் செலவாகிறது. அத னால்தான் அது எனக்குக் கெட்ட வழக்கமாகத் தென் பட்டது. அவர் ஒரு நாளைக்கு மூன்று பாக்கெட் காலி செய்கிறார். தன்னை ஒரு "செயின் ஸ்மோக்கர் என்று சொல்லிக் கொண்டார். இது ஏதாவது கவலையால் தான் தொடர்கிறது என்று நினைக்கிறேன். அதை மறக்க இது அவசியமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/56&oldid=914564" இலிருந்து மீள்விக்கப்பட்டது