பக்கம்:வெறுந்தாள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வெறுந்தாள் மனிதனுக்கே மயக்கம் தேவைப்படுகிறது. பித்த நிலையில் சித்தம் இழப்பவர்க்கு மார்ப்பியா தானே கொடுக்கிறார்கள். அதாவது மூளை அதிகம் வேலை செய்யக்கூடாது. அதற்கு ஒய்வு தரவேண்டும். அதற்குத்தான் இந்த லாகிரி வஸ்து தேவைப்படுகிறது. 'லாகிரி வஸ்துக்களை உபயோகிக் காதீர்கள். எங்கோ யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். 'புகை பிடிக்கக் கூடாது' என்று பலகை போட்டிருக் &pmit56ft. obsélàaujś60 ‘Smoking Strictly Prohitted GT6:1p) போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் என் கவனத்திற்கு வந்தது. நான் சின்ன வயதில் சிகரெட்டுப் பிடிக்க முயற்சி செய்தேன். ஒரு துண்டு பீடி' யாரோ பிடித்துப் போட்டு இருந்தார்கள். எனக்கு அது எச்சில் என்ற பேதம் தெரியாது. பின்னால்தான் இந்த பேதங்கள் எல்லாம் வளர்ந்துவிட்டன. அதை வாயில் வைத்து இரண்டு இழு இழுத்தேன். சே! ஒன்றுமே இல்லை. அதற்கப்புறம் நான் பெரியவன் ஆனதும் கலியாணம் ஆனதுக்கப்புறம் என்று நினைக்கிறேன். ஒன்றும்பொழு தும் போகவில்லை. அது மாமியார் வீடு அங்கே எப்படிப் பொழுதுபோகும். வெறும் போர். ஞானம் அவள் தன் வேலையில் கவனம் செலுத்தினாள். துளசி ராமாயணம் என்று நினைக்கிறேன். அதைத் துளசிதாசர் எழுதினார். தெரிந்ததுதானே. அவர் எப் பொழுதோ தன் குருவிடம் சரியாக நடந்து கொள்ள வில்லையாம். உடனே அவர் அவருக்கு ஒரு சாபம் தந்தாராம். 'நீ போய் மாமனார் வீட்டில் ஒரு மாதம் இருக்க வேண்டும்' என்று சொன்னாராம். அவருக்கு ஒன்றும் புரியவில்லையாம். மாமனார் வீட்டுக்குப் போவது நல்லதுதானே. இது என்ன தண் டனை. அதற்காகவே ஒரு கலியாணம் செய்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/57&oldid=914565" இலிருந்து மீள்விக்கப்பட்டது