உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 57 டாராம். இந்தக் காலத்து இளைஞர்கள் போல மாமனார் வீட்டை சொர்க்கம் என்று நினைத்தாராம். அதாவது உழைக்காமல் சாப்பிடுவது. அதைத்தானே சுகம் என்று நினைக்கிறார்கள். அங்கே போனாராம். ஒரு வேலையும் இல்லையாம். வேளைக்குச் சாப்பாடு, சுற்றிச் சுற்றி வருவது அதற்கப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லையாம். அதற்கப்புறம் ஒரே வேதனையாம். அப்புறம்தான் தெரிந்ததாம் யார் உலகத்தில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்று, ஒரு வேலையும் இல்லாமல் சுற்றிச் சுற்றி வருவது தான் ரொம்பக் கஷ்டம் என்று தெரிந்து கொண்டாராம். அதற்கப்புறம் தான் ராமாயணம் எழுதினாராம். இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியாது. அதே மாதிரி நிலைமைதான் எனக்கு ஏற்பட்டது. ஒன்றும் பொழுது போகவில்லை; நான் ஒன்றும் அப்படி ஒரு பெரிய கவியுமில்லை ஒரு காவியம் எழுத. அப்படி எழுதினால் மட்டும் என்ன பயன்? ராமபிரான் கலியாண குணங்களிலே அப்படியே லயித்துப் போய்விடலாம். அதனால் என்ன பயன்? ஒரு நாளைக்கு எனக்குச் சொல்ல முடியாத கோபம் வருகிறது. இவற்றையெல்லாம் தூக்கிக் கடலில் போட்டுவிடலாமா என்று. நான் ஒன்றும் பெரியார் கட்சி அல்ல. ராமா யணத்தைக் கொளுத்து என்பதற்கு. என்னமோ மனுஷன் 6Joãr 3,6}LüLGöpffair? "Too much morality" Qg5, Q#3 நாட்டின் வியாதிபோல் தெரிகிறது. சதா ஒழுக்கம் பிரச்சனை தான் சே! மனுஷன் முதல்ல சந்தோஷமாக இருக்கிறது என்பதைக் கத்துக்கணும். கவலைப்படுதல் எப்படி என்று தான் கற்றுக் கொண்டோம். ஏதாவது கஷ்டத்தைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டியது. அல்லது உண்டாக்கிக் கொள்ள வேண்டியது. சதா அதே கவலை; வேண்டியது தான். அதுவே வாழ்க்கைத் தத்துவமாக மாறுகிற அளவுக்கு வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வது எனக்குப் பிடிப்ப தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/58&oldid=914566" இலிருந்து மீள்விக்கப்பட்டது