உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வெறுந்தாள் இந்த வகையிலே கீழ் மட்டத்து ஜனங்களைப் பார்க்கும்பொழுது நாம் ரொம்ப பொறாமைப்பட வேண்டி யது தான். அவர்கள் வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குக் கஷ்டம் என்றால் இல்லாத கஷ்டம் ஒன்றுதான். இப்பொழுது நாட்டில் ஒரு புதிய சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. தனிப்பட்டவர்கள் வாழ் வைச் சீர்திருத்துவது என்பது. அதற்கு இனிக் சட்டமே செய்து விடுவார்கள் போல இருக்கிறது. அதாவது தலைமைப் பீடத்தில் இருப்பவர் குடிப்பது இல்லை யென்றால் இந்த நாட்டில் ஒருவரும் குடிக்கக் கூடாது. அவர் சிகரெட்டு பிடிப்பதில்லை யென்றால் இந்த நாட்டில் யாரும் புகை பிடிக்க கூடாது. குடும்பத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று பிரச்சாரம். உடனே பெண்கள் அந்தப் படங்களுக்கு வீழ்ந்தடிந்துப் போவார்கள்; ஏன்? அது ஆண்களைத் திருத்தும் படம் என்பதால். 'சினிமா நடிகர்கள் குடிப்பதில்லை. இப்படி ஒரு சபதம். அவர்களுக்குப் பெர்மிட் கிடையாது. இது ஒரு செய்தி. இதனால் என்ன ஆகப்போகிறது. மனிதன் இரட்டை வாழ்வு வாழப் போகிறான். ஒழுக்கம் கட்டுப்பாடு என்பதெல்லாம் உள்ளேயிருந்து வரவேண்டும். வெளியே இருந்து திணிக்கப்படுமானால் அவன் இரட்டை வாழ்வு தான் வாழ வேண்டி வரும். ஒழுக்கத்தில் Black market நடக்கும். சே மனிதன் இனி சந்தோஷமாக வாழ முடியாது. என்னமோ இந்த மாதிரி எண்ணங்கள் எனக்கு உண்டாயின. "வாழ்க்கையிலே சந்தோஷம் இருக்க வேண் டும். எது சந்தோஷத்திற்குத் தடையாக இருக்கிறதோ அது சரியானதல்ல என்பதுதான் என் தத்துவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/59&oldid=914567" இலிருந்து மீள்விக்கப்பட்டது