உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இது எழுத்தில் ஒரு புதிய முயற்சி, இதில் சில பாத்திரங் கள், உரையாடல்கள் இடம் பெறுகின்றன. பாத்திரங்களின் உரையாடல்கள் இக்கதையை இயக்குகின்றன. நாடகப் பாங்கு இதன் சிறப்புப் பகுதி. கதை சொல்பவன் தலைமைப் பாத்திரம்; அவன் பத்திரிகை ஆசிரியனாக இருப்பதால் கதைகளைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பு ஏற்படுகிறது. பிரசுரிக்கத் தகுதி அற்ற கதைகள் அவன் வீட்டில் குப்பையாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்று வெறுந்தாள் என்ற கதை : மற்றும் சில கதைகள் இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். சுறுசுறுப்பாக இயங்கும் சரசு அவள் ஒரு விதவை. மறுமணம் செய்து கொள்கிறாள். இலக்கிய ஆர்வம் மிக்கவள்; வானம்பாடி என்ற கவிஞன் புதுக்கவிதைகள் இயற்றுகிறான். இவர்கள் ஓர் இலக்கிய வட்டம் அமைக்கிறார்கள். இலக்கிய விமர்சனம் இவர்கள் உரையாடல்களாக அமைகின்றன. கதாசிரியன் மனைவி ரசிகத்தன்மை அற்றவள். இந்தக் கூட்டத்தை அவள் அறவே வெறுக்கிறாள். மாற்றத்துக்கு இப்பாத்திரம் இடம் பெறுகிறது. இறுதியில் அவளே தலைமை பெறுகிறாள். உயர்ந்த தத்துவம் பேசுகிறார்கள். வாழ்க்கை அவற்றை மாற்றி விடுகிறது. இப்படித் தத்துவம் பேசுகிறவர்கள் பலரும் சராசரி மனிதர்களே. வாய்ப்புகள் வரும்போது அவர்கள் மாறி விடுகிறார்கள். கொள்கைகள் அவற்றை மறந்து செயல்படு கிறார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் அவர்களும் வேகமாக ஓடுகிறார்கள்; அவ்வளவுதான். அவர்கள் இலக்கிய ரசனை, சிந்தனைகள் இவை அவர்களைவிட்டு நீங்குகின்றன. இதைக் காட்டுவது இக்குறுநாவல். ரா. சீனிவாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/6&oldid=914568" இலிருந்து மீள்விக்கப்பட்டது