உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எழுத்து என்பது புதிய பரிமாணம் கொண்டு இயங்குவது; சமுதாய விமரிசனம் புதுக்கவிதையாகிறது. இப்புதுக் கவிதை நடை உரைநடைக்கும் உரியது ஆகிறது. 'தெய்வத் திருமகன், திரெளபதி சூள் உரை இவை இரண்டும் என் எழுத்தில் உதயமாகிய புதுக்கவிதைப் படைப்புகள். இவற்றிற்கு முன்னோடியாக என் உரைநடை நூல்கள் புதுக்கவிதைத் தாக்கம் பெற்றிருக்கின்றன என்பதை ஒரு சில விமரிசகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அது இக்காலம் உருவாக்கித் தந்த உரைநடை, கவிதை உரைநடையிலும் இடம் பெற இயலும்; இது பலர் நடையிலும் காணப்படும் தனிக்கூறு. இந்நடைஇயல் என் படைப்புகளில் தனித் தன்மை பெறுகிறது. - மற்றும் சமுதாயச் சிந்தனைகள் நாவல் வடிவம் பெறுவது இதன் தனிச் சிறப்பு; கதை அதற்கு ஒரு கருவியே தவிரத் தலைமை பெறுவது இல்லை. பர்த்திரங்களின் உரையாடல்கள் சிந்தனை களை வெளிப்படுத்துவதற்குத் துணை செய்கின்றன; அதற்கு நாடகப் பாங்கு துணை செய்கிறது. இன்று கல்வி கண் திறக்கலாம்; ஒளி காட்டலாம்; ஆனால் வாழ வழி காட்டுவதில் வெற்றி பெறவில்லை; அதைப் பற்றிய சிந்தனைகள் மற்றும் தனி மனித மேம்பாடுகள், குடும்பப் பாச உறவுகள் இவற்றைக் கடந்து மனிதன் தன் சுற்றுச் சூழல்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/7&oldid=914579" இலிருந்து மீள்விக்கப்பட்டது