உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அது புதிய சமுதாயப்படைப்புக்கு வித்தாகும்; இதை இச்சித்திரம் வலியுறுத்துகிறது. இது பலராலும் பாராட்டப்பட்டு விமரிசனம் செய்யப்பட்டுப் பேசப்பட்ட நூல்; இது இன்றும் தன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் தகுதி பெற்றுள்ளது; இன்று இதன் செய்திகள் பயன் உள்ளவை என்பதால் மறுபதிப்புக் காண்கிறது. - ஒரு சில நூல்கள் காலத்தால் மங்கிவிட வாய்ப்பு உள்ளது; அதன் உள்ளடக்கமும் அதற்குக் காரணம் ஆகிறது. இந்நூல் சிந்தனைகள் இன்றும் வாழ்வுக்கு ஒளி காட்டும் நிலையில் உள்ளன. எழுதும்போது வெறுந்தாள்தான்; அச்சிடப்பட்ட பிறகும் வெறுந்தாள் என்பது முரண்தொடையாகும்; நூல் வெறுந்தாள் அன்று; செறிவு மிக்கது; அறிவு மிக்கது; தேடல் முயற்சியில் இது வெற்றி காண்கிறது. இது எழுப்பும் வினா, கொள்கை எழுத்துக்கு வேண்டுமா வேண்டாமா என்பது; கொள்கை இல்லாதவன் எழுத்து வெறுந்தாள்' என்று இது கூறுகிறது; அது ஏற்கத் தக்கதா இல்லையா என்பது சிந்திக்கத் தக்கது; அதுவே இந்நாவலின் கருப்பொருள். - ரா. சீனிவாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/8&oldid=914590" இலிருந்து மீள்விக்கப்பட்டது