உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tfm. é? 61 இவர் எதைப் பார்த்தாலும் நோய் என்ற கண்ணோட் டத்தில் பார்க்கிறார். என்பதைத் தெரிந்து கொண் டேன். 'இனிமேல் மன நோயாளிகள் தாம் இந்த நாட்டில் அதிகமாகப் போகிறார்கள்' என்று ஒரு புதுச் செய்தியைச் சொன்னார். வெறுந்தாள் கதைப் பாத்திரம் மின்னலிட்டு என் நினைவை மீண்டும் தூண்டியது; அவனுக்கு வறுமை ஒருநோய் அல்ல, அதைப் பற்றி எண்ணிக் கவலைப் பட்டது ஒரு மன நோய்தானே என்று என்னையும் அறியாமல் நினைக்கத் தொடங்கினேன். மற்றொரு கதை கவனத்திற்கு வந்தது. அவர் ஒரு புராணப்பிரசங்கி, இராமாயணம் பாரதம் இந்தக் கதை களைப் பிரசங்கம் செய்வது அவர் தொழிலாக இருந்தது. அதிலே சீதை ஒரு கேள்வி கேட்கிறாள். 'இராமன் ஒகோ என்று சண்டை போட்டுவிட்டு என்னை மீட்க வருவான். அவனிடத்தில் என் கற்பை எப்படி நிறுவ முடியும். அவன் என்னை எப்படி நம்புவான்’ என்று கவலைப்படுகிறாள். இவர் சீதையின் கற்பைப் பற்றிக் கதை காலட்சேபம் செய்வார். இவர் தன்னை சாட்சாத் இராம னாகவே கருதிக் கொண்டு வந்தார். வேறு எந்தப் பெண்ணையும் மனத்தால் கூட நினைப்பது இல்லை. எந்தப் பெண்ணையும் தொட வேண்டும் என்ற ஆசையும் எழுந்ததில்லை. ரொம்பக் கட்டுப்பாடாக வாழ்ந்தார். அதனால் என்ன ஆயிற்று. அவர் மனைவிக்கு அவர்மேல் ஒரு திகப்பு ஏற்பட்டு விட்டது. ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் கண்டாள். அவளுக்கு அவர் ரொம்பவும் தொல்லை கொடுத்தார். அவரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைத்தாள், வாய்ப்பே கிடையாது. அவள் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/62&oldid=914571" இலிருந்து மீள்விக்கப்பட்டது