உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வெறுந்தாள் [4] அன்று கூட்டம் கலைந்தது; கூட்டம் ஒத்தி வைக்கப் படவில்லை. மறுபடியும் எப்பொழுது கூடுவது என்பதைப் பற்றி நாங்கள் எண்ணிப் பார்க்கவில்லை. அந்த மாதிரி கூட வேண்டுமென்றால் என் அறையில் தொலைபேசி எனக்கு மிக அருகில் இருந்தது. அதாவது என் மேஜை மேல் இருந்தது. சரசுவதி டாக்டர் மனைவி. டாக்டருக்குத் தானே முதல் இடம் தருகிறார்கள்; தொலைபேசி வைக்க, அவள் திடீர் என்று நினைத்துக் கொண்டால் போன் அவள் ஒலியை எழுப்பும். 'கணிர் என்று கேட்கும்பொழுது அவள்தான் பேசுவாள் என்று தெரியும். எனக்கு அவளிடம் பேசுவதில் தனி இன்பம். ஏன் என்று தெரியவில்லை. வாய்ப்பு இருந்தால் அவள் என்னைத் தான் மணம் செய்து கொண்டிருப்பேன் என்ற சொற்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. என் நெஞ்சு மிகவும் வன்மையான நெஞ்சு. எது நல்லதோ அதைப் பற்றிக் கொள்கிறது. இதையெல்லாம் மனிதனின் பல வீனங்கள் என்று சொல்லுகிறார்கள். அந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பல வீனங்களில் தான் மனிதனே வாழ்கிறான் என்பது என் எண்ணம். சமுதாயம் இது தப்பு என்று நினைக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றி னால், அதைத் தொடர்ந்தால் அது எப்படி பலவீனமாகும். சமுதாயத்துக்கு அடிபணிந்தால்தான் பலவீனம். ஆரம்பத்தில் அவளைப் பற்றி அறிமுகப்படுத்தியிருந் தேன். அவள் விதவையாக நீடித்து இருக்க வேண்டியது இல்லை. எப்படியும் அவள் தனித்து வாழ முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/71&oldid=914581" இலிருந்து மீள்விக்கப்பட்டது