பக்கம்:வெறுந்தாள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ . 71 யாராவது அவள் அழகில் மயங்கித்தான் ஆக வேண்டும். சிலர் மேலோட்டமாக எட்டிப் பார்க்கிறார்கள். சிலர் எட்ட நின்று ரசிக்கிறார்கள். நான் அவள் பேச்சில் மயங்குகிறேன். அதைவிட அவள் சிரிப்பில் மயங்குகிறேன். 'பெண் என்றால் சிரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அவள் எப்படிப் பெண்ணாவாள்? பேயும் தான் சிரிக்கிறது; அது கோரச் சிரிப்பு: இப்பொழுது சிரிக்கா விட்டால் அவள் எப்பொழுது சிரிக்கப் போகிறாள்? கிழவியாகிய பிறகா?” அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டுதான் இருப் பாள். என் உள்ளத்தில் அது இனிய கானமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிரிப்புக்கு இவ்வளவு ஆற்றல் இருக் கிறது என்பது அவளிடம்தான் காண முடிந்தது. அவள் என் ரசிகை என்கிறாள். உண்மையில் நான் அவள் ரசிகன். இலக்கியம் எங்களை இணைக்கிறது; வாழ்க்கை எங்களைப் பிரிக்கிறது. கற்பனை எங்களை உயர்த்துகிறது. உண்மை எங்களைத் தாழ்த்துகிறது, இப் படி ஒரு உலகம் இருக்கிறது என்பது பலபேருக்குத் தெரியாது. உறவு என்றால் உடல் உறவு என்றுதான் இந்த உலகம் நினைத்து வந்தது. உணர்வுகளால் ஒன்றாவதும் உறவு என்பதை இதுவரை யாரும் கூறியது இல்லை; நானும் அறிந்தது இல்லை. 'ஆசை, அன்பு, பாசம்' என்ற கதையை அவள் ஏன் ரசித்தாள். அதில் அவள் ஒன்றிவிட்டாள். தன் கணவனை அவள் இந்த மூன்று சொற்களால் அலசிப் பார்த்தாள். அவர் முதற்படியில் இருக்கிறார். என்றும், தான் இரண்டாவது படியில் இருப்பதாகவும் கூறினாள். பாசத்தின் வலையிலும் அவள் சிக்கிக் கிடப்பதாகச் சொல்கிறாள். இம்முன்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/72&oldid=914582" இலிருந்து மீள்விக்கப்பட்டது