பக்கம்:வெறுந்தாள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ग़ा. &# 77 குறைகளைக் காட்டி விடலாம். எது வழி? முடிவு என்ன? அதைப் பற்றிச் சொல்பவன் தான் எழுத்தாளன். புவனா ஒரு கேள்விக் குறி, அதற்கு விடை என்ன? திரைச் சீலை வெறுந் திரையைத்தான் காட்டுகிறது. வெறுந்திரை எனக்கு வெறுந்தாளை நினைவுபடுத்துகிறது. ஞானம் சொல்கிறாள்! இலக்கியத்தை விமரிசனம் செய்யலாம்; வாழ்கையை விமரிசிக்கக் கூடாது என்று. அதாவது கணவனைப் பற்றி விமரிசிப்பது குடும்பப் பெண் களுக்கு அழகு அல்ல என்பது அவள் கருத்து. விமரிசிக்கப் படுகிற பொருள் எல்லாம் இலக்கியத்தில் படைக்கப் படுகின்றன. மனிதர்களும் விமரிசனத்துக்கு உள்ளாக வேண்டியவர்கள் தானே. வாழ்க்கை வேறு இலக்கியம் வேறு என்ற வேறுபாட்டை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வானம்பாடியிடத்தில் ஒரு துடிப்பு இருக்கிறது. பழமையை அடியோடு இடித்துத் தள்ளுகிறான்; புதிய பிரச்சனைகளைக் காட்டுகிறான். ஆனால் அவனும் விடை தர முடியவில்லை. வினாக்களை எழுப்புவதுதான் புதுக் கவிதை. 'கடற்கரையிலே கண்ணகிக்குச் சிலை; நடை பாதை யிலே பெண்ணுக்கு விலை இப்படி ஒரு கவிதை. அவன் ஏன் அதை எழுதிக் கெண்டு வந்து தருகிறான். அவன் என்ன நினைக்கிறான். 'உங்கள் முயற்சி, படிப்பு, பாராட்டு இதெல்லாம் ஏன் பழமைக்குச் செல்கிறது? செத்து மடிந்தவர்களுக்குச் சிங்காரச் சிலை வைத்தால் என்ன பயன்? வாழத் துடிப் பவர்க்கு வழி வகுக்காத நாட்டில் செத்தவர்களுக்குச் சிலை. சிலை வைப்பதிலேயும் பொருள் இருக்கிறது. அது மனிதனைப் போலச் சோறு கேட்காது. அது கல்லாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/78&oldid=914588" இலிருந்து மீள்விக்கப்பட்டது