பக்கம்:வெறுந்தாள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வெறுந்தாள் நின்றுவிடுகிறது. அதனால்தான் வைக்கிறீர்களா' இத அவன் கேள்வி. அந்தப் புதுக் கவிதையில் நான் ஆழ்ந்து கிடந்தேன்; என் கற்பனையைக் கலைக்க வழக்கம் போல் என் நிகழ் காலம் என் அறைக்கு வாந்தாள். அதுதான் என் மனைவி ஞானம். அவள் இந்தச் சமுதாயத்தின் நிகழ் காலமாகக் காணப் பட்டாள். குடும்ப உணர்வால் ஞானத்தோடும் ஒன்றினேன். சமுதாய உணர்வால் வேறுபட்டேன். அவளை எவ்வாறு இழுத்தாலும் மேலே வரமாட்டாள். அதே போல் சரசுவதி யைக் குடும்பத்துள் அடைத்து வைக்க முடியாது என்பதை அவள் பலமுறை வெளிப்படுத்திவிட்டாள். 'கடற்கரையைக் கடக்கச் செல்லும் சுரங்கம் பகலில் நடைபாதை, இரவில்?’ இப்படி ஒரு கேள்வி கேட்டு வைக்கிறான் புதுக்கவிஞன். இது இந்த உலகம் காண முடியாத காட்சி, அடி உலகில் என்ன இருக்கிறது என்று யாரும் காண முயல் வதில்லை. அதை அவன் காண முயல்கிறான். வெளிச் சாயம் பூசினால் போதுமா? இதுதான் அவன் எழுப்பும் கேள்வி தாஜ்மகால்' ரசித்துக் கொண்டிருந்தால் பசித்துக் கொண்டிருப்பவனுக்கு யார் ரொட்டித் துண்டு கொடுப்பது? காந்தியின் புன்னகையில் ஏழையின் அழுகையை ஒழிக்க முடியுமா. இது அவன் கேட்கும் கேள்வி. அவனும் எங்கள் வட்டத்தை அணுகுவது ஏன்? சரசுவதியின் அழகைக் கண்டு அல்ல; அவன் அவளைத் தலை எடுத்தும் பார்க்க மாட்டான். அவளும் இலக்கியம் என்ற கண்ணாடியைத் துடைக்கிறாள். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறாள். டாக்டர் அவரால் நோய்தான் காண முடிகிறது. அவர் ஆரோக்கியத்தை எப்பொழுதும் கண்டது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/79&oldid=914589" இலிருந்து மீள்விக்கப்பட்டது