உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வெறுந்தாள் துடிக்கிறாள். அதை இலக்கிய விமரிசனம் என்று கூறு கிறாள். வெறும் விமரிசனம் போதாது படைப்பும் வேண்டும் என்றும் வற்புறுத்துகிறாள். என் கதைப் படைப்புத் திறனைக் கண்டு வியக்கிறாள். நொண்டியின் கதையை வைத்து மனித சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டிய கதையைப் படித்து அவள் என்னைப் பாராட்டி னாள். என் எழுத்தாற்றலைத் தட்டி எழுப்ப வேண்டும் என்ற ஆவலால் தான் அவன் என்னிடம் பாசம் கொண்டாள். அதனால் அவள் என் ரசிகை ஆனாள்; அவள் என் சிந்தனையைத் தூண்டுவதால் நான் அவள் ரசிகன் ஆனேன். இதை இந்த ஞானத்தால் அறிய முடியவில்லை. அவள் அழகாக இருப்பதால் அவளுக்கும் எனக்கும் உறவு ஏற்பட்டுவிடும் என்று இந்த ஞானம் அஞ்சுகிறாள். ஞானத்தின் எல்லை அது. நான் என்ன செய்ய முடியும்? அவர்கள் போன பின்பு என் நினைவுகள் இவ்வாறு அலைமோதித் தெளிவு பெற்றன. [5] நான் இலக்கியம் படைக்க வேண்டும் என்பது சரசுவதியின் விருப்பம். கலைமகள் அவ்வாறு நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும். புதுக் கவிதை படைக்க வேண்டும் என்பது வானம்பாடியின் ஆசை அவள் எப் பொழுதும் தன் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது டாக்டரின் ஆசை நிலையான பத்திரிகைத் தொழிலை விடக் கூடாது என்பது என் மனைவியின் பிடிவாதம். எழுத்தாளனுக்கு எழுதுவதற்குப் புதிய அனுபவங் கள் தேவை; புதிய பிரச்சனைகள் தேவைப் படுகின்றன. பிரசுரிக்காத கதைகளும் எழுதிக் கிழித்த குப்பைகளும் தான் என் அறையில் இருந்தன என்பதை முன்னர்க் குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/81&oldid=914592" இலிருந்து மீள்விக்கப்பட்டது