பக்கம்:வெறுந்தாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ππ. ό" 81 பிட்டேன். பத்திரிகை ஆசிரியர் என்பதால் பிரசுரிக்காத கதைகளும், எழுத்தாளர் என்பதால் குப்பைகளும் தான் நிறைந்தன. பத்திரிகைத் தொழிலை ஏன் விடவேண்டும். இது ஒரு பக்கம்; அதைவிட்டால்தான் முழு எழுத்தாளன் ஆக முடியும். இது மறுபக்கம், பத்திரிகைக்கு எழுதுவது வேறு; கதைக்கு எழுதுவது வேறு. இன்றைய தினம் எழுத்து திசை மாற வேண்டும். கதையை எடுத்துப் போடுவது எப்படி என்பதில் ஆழாமல் கதையை இயக்குவதில் ஆழ வேண்டி யிருக்கிறது, என் எதிர்காலத்தில் எழுத்தில் எதை எடுத்து எழுதுவது? வெறுந்தாள் தீட்டிய மாணவர் பிரச் சனையையா? 'பிறவிக் குருடன் தீட்டும் உணர்வுப் பிரச் சனையையா? 'சிரிப்புத் தீட்டிய சமூகப் பிரச்சனையையா? 'விமோசனம் தீட்டும் ஒழுக்கப் பிரச்சனையைா? எந்தக் கதையை வெளியிட்டாலும் விமரிசனங்கள் ஆதரவாக வருவது இல்லை. கடுமையாக விமரிசிக்கிறார்கள். 'பிறவிக் குருடன் கதையை வெளியிட்டால் இது ஒரு கதையா என்ற கேள்வி எழும், அவன் பிறக்கும் போதே குருடன்; அவன் இந்த உலகத்தின் ஒளியையே கண்டது இல்லை. அவனுக்கு இந்த உலகம் ஒரே இருட்டு மயமாகத் தென்பட்டது. ஒளி என்றால் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்துவிடுகிறான். அந்தக் கதை உருவகமாக ஒர் உண்மையைத் தீட்டித் தந்தது. இந்த உலகத்தில் இன்பம் என்பது என்ன என்றே தெரியாமல் கோடிக் கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு ஒரே இருட்டாக இருக்கிறது. அவர்கள் எங்காவது ஏதாவது தட்டுப்படுமா என்று பார்க்கிறார்கள். வறுமை ஒரு கொடிய நோய் என்பதை உணர்கிறார்கள். அதிலே இருந்து விடுபட முடியாது என்பதை நன்றாக உணர்ந்தவர்கள். அவர்கள் யாரையும் நோவது இல்லை. எல்லாம் விதி என்று கூறி அமைதி கொள்கிறார்கள். அவர்கள் பிறவிக் குருடர்கள் என்ற கற்பனையை எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/82&oldid=914593" இலிருந்து மீள்விக்கப்பட்டது