பக்கம்:வெறுந்தாள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வெறுந்தாள் தந்தது. சமுதாயத்தில் பலர் எதையும் எதிர்க்காமல் இவ் வளவுதான் என்று எடுத்துக் கொண்டு வருகிறார்கள். கண் பெற்று வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அதிருஷ்ட வாதிகள் என்பது இந்தக் குருடர்களின் சித்தாந்தம். 'வெறுந்தாள் அது இன்றைய சமுதாயப் பிரச்சனை! மாணவனுக்கு எதிர்காலம் நம்பிக்கை தரவில்லை. அவன் தேர்வில் எழுதும் விடைத்தாள்கள் வெறுந்தாள்கள் ஆகின்றன. அந்த அறிவுத் தேர்வு வெற்றி தோல்வியைத் தருகிறது. ஆனால் வாழ்க்கையில் ஒளி காணவில்லை. படித்தால் வேலை கிடைப்பது என்பது பழங்கதையாகப் போய்விட்டது. இன்று அது முயற்கொம்பாகிவிட்டது. இதைத்தான் அந்த வெறுந்தாள் காட்டுகிறது. அது இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். அவன் தவறைக் சுட்டிக் காட்டி அவன் வெறுந்தாள் தந்தான் என்று கூறுவதை விட அவன் கஷ்டப்பட்டுப் படித்தான். இரவும் பகலும் படித்தான். போட்டி போட்டுக் கொண்டு படித்தான். நகையை விற்றுப் படித்தான் அல்லது மார்வாடிக் கடையில் வைத்துப் படித்தான் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அந்த சர்ட்டிபிகேட்டை வைத்து யாரும் நம்பிக் கடன் கூடத் தர மறுத்துவிட்டார்கள். ஏன் படித்தோம். என்ற கேள்வியைத்தான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். வாங்கும் போது அது நீண்டு கிடந்தது. பிறகு அதைச் சுருட்டி வைத்தான். பின் அதைப் பிரித்துப் பார்க்கத் தேவையே இல்லாமல் போய்விட்டது. 'சுருட்டி வைத் தான் மறுபடியும் பிரிப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அது வெறுந்தாளாக ஆகிவிட்டது” என்று எழுதி இருக்கலாம். அழகான தலைப்பைத் தவறாகப் பயன்படுத்திவிட்டதைப் போன்ற உணர்வு தான் எழுகிறது. அதனால் தான் அதைப் பிரசுரிக்க முடியாமல் போய் விட்டது. அது தனிப்பட்டவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கதை; அது சமூகத்துக்குப் பயன்படாததால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/83&oldid=914594" இலிருந்து மீள்விக்கப்பட்டது