உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 85 சமுதாயக் கட்டுகளை எவன் தேவைப்பட்டால் துணிந்து களைந்து எறிகிறானோ அவன் முன்னோடி. அவன் இந்த உலகை வாழத் தகுதியுடையதாக ஆக்குபவன் என்பது என் சித்தாந்தம். தான் அழுது மற்றவர்களின் இரக்கத்தை எழுப்பு பவனைவிட மற்றவர்களை அழச்செய்து அவர்களுக்காக இரக்கம் காட்டுபவனே வீரன் என்பது புதிய சிந்தனை, இந்தப் புதிய சிந்தனைகள் தோன்ற என் எழுத்து உதாரண மாக வேண்டும் என்பது என் ஆசை. எப்படிச் சந்தோஷமாக வாழ்வது? தனிமனிதன் எப்படிச் சந்தோஷமாக வாழ முடியும். அப்படித்தான் இது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மாறிச் சமு தாயம் சந்தோஷமாக இருக்கப் பாடுபடவேண்டும். அது தான் நான் எழுப்பிய தத்துவத்தின் விளக்கம். இலக்கியம் அறத்தை உணர்த்த வேண்டும்; அழகைத் தோற்றுவிக்க வேண்டும்; இறுதியில் இன்பத்தைப் படைக்க வேண்டும். 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லால் வேறு ஒன்று அறியேன் பராபரமே' என்று ஒரு பிரபல வாரப் பத்திரிகை தன் நோக்கத்தை உயரிய கொள்கையாக வெளியிடுகிறது. 'தமிழ்த் திருநாடு தன்னை பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா' என்று மற்றும் ஒரு பத்திரகை தன் நோக்கத்தைக் குறிப்பிடுகிறது. எல்லோரும் இன்புற்று இருப்பது என்பது பத்திரிகை படிக்கின்றவர் சுவைத்து இன்புறுவதைக் குறிப்பிடுகிறது. அது பத்திரி கைக்கு எப்படிப் பொருந்தும்? மனித இனம் இன்பம் அடைய வழிவகை என்ன என்று ஆராய்ந்து வழி சொல்ல வேண்டும். அதுதான் கதையின் முடிவு. முடிவு சரியாக அமைய வேண்டும். இன்றைய தினம் சமூகக் கொடுமையில் சிக்குண்டு தவிப்பவர் பெண்களே! நனவோட்டம்' என்ற நாவலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/86&oldid=914597" இலிருந்து மீள்விக்கப்பட்டது