பக்கம்:வெறுந்தாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வெறுந்தாள் படித்தேன். அது ஒரு நாவல் விமரிசகன் எழுதிய கதை. 'பெண் எப்படி அலைக்கழிக்கப்பட்டாள். அவள் அழுது கொண்டே இருக்கிறாள் பிறர் இரக்கத்துக்கு அவள் இந்தச் சமுகத்தை அழவைத்தாள் கட்டிய கணவனைச் சிந்திக்க வைத்தாள். அவளிடத்தில் அமைந்திருந்த வீரத்தைத் துணிவை நான் பாராட்டுகிறேன். அந்தக் கதை சரியா இல்லையா என்பதைப் பற்றி விமரிசனங்கள் வந்தன. எப்படியாவது கணவனோடு அவள் வாழ்ந்திருக்க வேண் டும். அவனைத் திருத்தப் பாடுபட்டு இருக்க வேண்டும். மற்றொருவனை மணந்து இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். அந்தக் கதைத் தலைவி உஷா கேட்கும் கேள்வி இதுதான். என் எதிர் காலம் என்ன? இப்படியே அழுது அழுது நான் சாக வேண்டுமா? சாவுதான் முடிவு என்றால் அதற்காக நான் பிறந்தபோது என் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டியதில்லை; நான் வளர்ந்த போது என்னை எடுத்துச் சீராட்டிப் பாராட்டி மகிழ்ந்திருக்க வேண்டியதில்லை. நான் பருவம் அடைந்தபோது அதை யே விழாவாக நடத்திப் பலருக்குத் தெரிவித்து அவர்கள் பூரிப்பு அடையத் தேவையில்லை. என் பூப்பில் இந்த உலகம் மகிழ்ச்சி பூத்தது. என் மணவிழாவில் உலகம் மகிழ்ந்தது. இந்த அரிய வாழ்க்கையைச் சாவிலே சந்திக்க நான் விரும்பவில்லை. வாழ்ந்து காட்டுகிறேன்' என்று ஒரு அறை கூவல் விடுத்தாள் அந்தக் கதைத் தலைவி உஷா. அவர்களால் மற்றவர்களும் கெட்டுவிடுவார்கள் என்று விமரிசித்தவர்களும் இருக்கிறார்கள். முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தான் எழுதினார்கள். சமூகத்துக்கு அடிபணிந்து அவள் செத்திருந்தால் ஆகா கதை எவ்வளவு அழகாககச் சோகத்தில் முடிந்திருக்கிறது என்று பாராட்டி இருப்பார்கள். மீண்டும் இந்தத் தத்துவம்தான் என் நினை வுக்கு வருகிறது. 'மற்றவர்கள் தன் அழுகையைக் கண்டு இரக்கப் படுவதைவிட மற்றவர்களை அழவைத்து அவர்களுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/87&oldid=914598" இலிருந்து மீள்விக்கப்பட்டது