பக்கம்:வெறுந்தாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 87 இரக்கப்படுவதுதான் உயர்ந்தது” என்ற தத்துவம் அந்த கதையிலிருந்து எழுந்தது. சமூகம் இந்த முடிவை ஏற்காது தான். ஏற்காவிட்டால் போகட்டுமே. அதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும். சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி னால் போதும். அந்த அளவில் அந்த முடிவு தக்கது என்றே பட்டது. ஏன் திடீரென்று அந்தக் கதைத் தலைவி உஷாவைப் பற்றி எண்ண வேண்டும். அந்த நாவல் படித்த நினைவு; நனவோட்டமாக அமைந்த அந்த நாவல் ஒரு புதிய திருப்பு நிலையைக் காண்கிறது. சம உரிமை, சம அந்தஸ்து, சம உடைமை' 'இம்மூன்றும் அடங்கியதுதான் சமதர்மம். அது தான் இந்தச் சமுதாயம் அடைய வேண்டிய இன்ப வாழ்வு. அதைத்தான் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது' என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. சந்தர்ப்பவாதிகள் அடைகிற சந்தோஷத்தை வாழ்வின் லட்சியம் என்று கூறமுடியாது. லட்சியவாதிகள் உயர்ந்த லட்சியத்தைக் கடைப்பிடித்து அடையும் வெற்றியே சந் தோஷம் என்பது. இந்த நினைவுகள் அவர்கள் நீங்கியதும் என் நினைவில் எழுந்தன. இலக்கிய விமரிசனம் முடிந்தது. ஞானத்தின் விமரி சனம் தொடங்கியது நான் அந்தக் கூட்டத்தை அவ்வப் பொழுது கூட்டுகிறேன் என்பது பற்றியது; கதை எழுது வதாக இருந்தால் நீங்கள் பாட்டுக்கு எழுதுவதுதானே! மற்றவர்களிடம் ஏன் படித்துக் காட்ட வேண்டும்?' என்று கேட்கிறாள். பத்திரிகையில் எந்தத் தொடர் கதையும் வராவிட்டால் ஏதாவது புனைபெயரில் அவ்வப்பொழுது எழுத வேண் டிய அவசியம் ஏற்பட்டது. உரிமையாளரும் 'பத்திரிகை ஆசிரியர் என்றால் ஏதாவது நீங்களும் எழுதவேண்டும்' என்று கட்டளையிடுவார். ஆனால் அவர் ஒரு விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/88&oldid=914599" இலிருந்து மீள்விக்கப்பட்டது