உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வெறுந்தாள் வகுத்திருக்கிறார். எங்கள் சொந்தப் பெயரை வெளியிடக் கூடாது; கற்பனைப் பெயர்தான் போடவேண்டும். என்பார். புது ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். என்றால்தான் வாசகர்கள் படிக்கிறார்கள். அதற்காகவே நான் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதிய உத்தியைக் கையாள்வேன். பாத்திரமே கதை சொல்வது போலத் தொடங்குவேன். அல்லது டயரிக் குறிப்புச் செய்திகளை வெளியிடுவது போல வெளியிடுவதும் உண்டு. சில சமயம் இரண்டு மூன்று பாத்திரங்கள் பேசுவதைப் போலவும் எழுதுவது உண்டு. பெண் எழுத்தாளர்கள் பெயர்களையும் வைத்து எழுதுவது உண்டு. சினிமா நடிகர்களுள் புதுமுகத்திற்குக் கிராக்கி இருப்பதுபோல் எழுத்தாளர்களுக்கும் புதியவர் களுக்கு எப்பொழுதும் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னிடம் ஒரு கெட்ட பழக்கம். கதை வெளியிடு வதற்கு முன் என் கதையைப் பிறரிடம் படித்துக்காட்டி அவர்கள் எதிரொலி' என்ன என்பதைக் காண முயல்வது உண்டு. நான் எழுதியது என்று சொல்வது இல்லை. பத்திரி கைக்கு வந்த கதைகள் என்று சொல்லி விமரிசிப்பது உண்டு. அதனால் ஒரு பெரிய நன்மை உண்டு. வெளி வந்ததும் வாசகர்களிடையே தோன்றும் வெறுப்பையும் ஒதுக்கீட்டையும் தவிர்க்க முடிகிறது. அதற்காகவே சரசுவதி யின் வருகையை நான் விரும்பினேன். ஒரு பெண் எப்படி விமரிசிக்கிறாள் என்பதை அறிவதற்காகவே அவள் விமரி சனத்தைக் கேட்பது எனக்கு வழக்கமாக விட்டது. ஞானத்துக்கு அந்த ஞானம் இல்லாததால் அவள் பாஷை யில் சொன்னால் நான் சச்சுவைத் தேடவேண்டியிருந்தது. இப்படி என் பெயரை மறைத்துவிட்டு எழுதுவது என் மனச்சான்றிற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் பத்திரிகை ஒடவேண்டுமே. பத்திரிகையில் புதிய அம்சங் கள் எழுந்தால்தான் அதற்கு வரவேற்பு ஏற்படுகிறது. அதுவும் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டி இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/89&oldid=914600" இலிருந்து மீள்விக்கப்பட்டது