உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வெறுந்தாள் உறுதி; எதுவும் எழுதாவிட்டால் முடியாவிட்டால் வெறும் நகைச் சுவைத் துணுக்குகளைப் போட்டு நிரப்பிவிடலாம். அவர்களால் எழுத முடியாவிட்டாலும் போட்டி ஒன்று வைத்தால் நிறையத் துணுக்குகள் வந்துவிடும். அதைக் கொண்டு சுலபமாக ஒட்டிவிட முடியும் என நம்புகிறாள். அவள் ஏதோ ஒரு பிரபல பத்திரிகையின் போக்கைப் பார்த்து இவ்வாறு பேசுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். 'வெறும் நகைச் சுவையை வைத்தே எந்தப் பத்திரிகையும் ஓடாது. பிறகு அந்த பத்திரிகையே நகைச் சுவைக்கு இடமாகிவிடும்' என்று அவளோடு வாதித்தேன். "எழுத்தாளன் விமரிசகர்களை உருவாக்குகிறான். விமரிசகர் எழுத்தாளர்களைப் படைக்கிறார்கள்' என்று நான் அவளிடம் விளக்கினேன். எழுத்துத் தனிக் கவர்ச்சி உடையது. உண்மை மனிதர் கள் எப்படி வாழ்ந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எழுத்து மாந்தர்கள் சரியாகப் படைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வாசகர்கள் மனமுடைந்து போவார்கள். ஏற்றுக் கொள்ளத்தகாத கருத்தைச் சொன்னால் தப்பித்துக் கொள்ள முடியாது. கடுமையான விமரிசனத்துக்கு ஆளாக வேண்டியது தான். படைக்கப்படும் பாத்திரங்கள் விரும்பத் தக்கவர்களாகப் படைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேதனை அடைகிறார்கள். உயர்ந்த பாத்திரங் களுக்கு ஏதாவது தீமை நிகழ்ந்தால் அதை வாசகர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். தாம் அந்தப் பாத்திரங் கள் ஆகிவிடுகிறார்கள்; அதனால் எழுத்து பயங்கரமான கலை. பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் எப்படி வேண்டு மானாலும் எழுதிவிட முடியும். வாழ்க்கையை விமரிசனம் செய்யும் எழுத்தாளர்கள் நல்லது வாழ வழி செய்ய வேண் டும். எப்படியும் நல்லது வாழ வேண்டும். எது நல்லது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/91&oldid=914603" இலிருந்து மீள்விக்கப்பட்டது