உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 91 என்பதில் தான் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகிவிடுகிறது. என் எழுத்து இந்தச் சமுதாயத்துக்கு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது என் ஆசை. இதுவரை எழுதியதையே எழுதுவது பிடிக்க வில்லை. எதையும் எழுதாமலும் இருக்க முடியாது. புதிய சிந்தனைகளைப் புகுத்தாவிட்டால் இந்த வாசகர்கள் பழைய எழுத்தாளர்களையே காரணம் இல்லாமல் புகழ்ந்து கொண் டிருப்பார்கள். புகழட்டும். நல்லதுதான் அந்தக் கருத்துகள் காலத்தோடு ஒட்டாவிட்டால் அவற்றைப் புகழ்வதால் சமுதாயம் தேக்கம் அடைந்துவிடுகிறது. அந்த வகையில் புதுக் கவிதை படைப்பாளி வானம்பாடியை எனக்குப் பிடித்து இருக்கிறது. அவனது பார்வை, சிந்தனை என் னிடத்தில் புக வேண்டும் என்பது என் ஆசை எழுத்தாளன் பல உருவங்களைப் பார்த்துக் கூட்டிக் குறைந்து ஒரு புதிய உருவத்தைப் படைக்கிறான். சரசுவதி எனக்குப் பேசும் பொற்சித்திரமாக விளங்குகிறாள். அவள் குறிபிட்ட ஐந்தாவது பசி அவளிடம் இருக்கிறது. அது அவள் தனித் தன்மை. என்னுள் பல கேள்விகளை எழுப்பி வருகிறாள். அவற்றிற்கு என் எழுத்தில் விடை காண முயல்கிறேன். எனக்கு அந்த வகையில் ஆசிரியையாக விளங்குகிறாள். ஆசிரியர்கள்தானே வினாக்களை எழுப்புவார்கள். 'அவளிடத்தில் ஏன் அப்படிப் பேசுகிறாய். அவ ளிடத்தில் என்ன இருக்கிறது? இது என் ஞானத்தின் கேள்வி. 'அவளிடம் கண்ணில்படும் அழகு இருக்கிறது. என் கருத்தில் படும் அறிவும் இருக்கிறது. புதுமைப் பெண்ணின் சிந்தனை ஒட்டம் இருக்கிறது' என்று சொன்னேன். 'படித்த பெண்கள் அவர்கள்தான் பயப்படுகிறார்கள்.' இந்த அருமையான கருத்து என் சிந்தனையைத் தூண்டி யிருக்கிறது. ஏன் ஒவ்வொருவரின் சிந்தனையையும் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/92&oldid=914604" இலிருந்து மீள்விக்கப்பட்டது