பக்கம்:வெறுந்தாள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 95 சரஸ்வதி தேவைப்படுகிறாள். ஒரு வானம்பாடியின் விமர்சனம் உதவுகிறது. ஞானம் என்ன சொல்வாள். 'உங்களுக்குத் தான் சொல்கிறேன். அந்தப் பாட்டு உணர்த் தும் நீதி நீங்கள் பிற பெண்டிரைப் பார்க்க கூடாது. அதுதான் இலக்கியம்' என்பாள். 'அதற்குத்தான் சச்சின் ரசனை உங்களுக்கு வேண் டாம் என்று சொல்வது' என்று அடித்துப் பேசுவாள். நான் அந்தப் பாட்டை அவளிடம் காட்டியதில்லை. விமரி சித்ததும் இல்லை. அப்புறம் அது அவளுக்கு ஒரு இலக் கியச் சான்றாக அமைந்துவிடும். 'மது'வால் விளைந்த தீமையை விட அதற்கு இது வரை அரசாங்கம் வாங்கும் வரிகளும் ஏலத் தொகைகளுமே உண்மையில் மக்களை வாட்டுகின்ற. குடிப்பது கெட்ட பழக்கம்தான். அதை விடமுடியாது என்பதற்காக அதற்கு அதிக வரி போட்டு நிறைய பணத்தை அரசாங்கம் கஜானாவில் சேர்க்கிறது. அதைக் கல்வி, மருத்துவம் முதலிய பொதுத் துறைகளுக்குப் பயன்படுத்துகிறது; இது எவ்வளவு பாவமான செய்கை. குடிப்பவனை அவன் செய்யும் குற்றத்துக்காக வரிகள் என்ற பெயரால் நிறைய கொள்ளை அடிக்கப்படுகிறது. அதே போலத்தான் பெர் மிட்டுகள் வசதி உடையவர்களுக்குத் தரப்படுகின்றன. இல்லாதவர்கள் பெர்மிட்டு வாங்க முடியாமல் கலங்கலைக் குடிக்கிறார்கள். அந்தக் குடும்பங்களைக் கலங்க வைக் கிறார்கள். இப்பொழுதும் அதே நிலை தொடரத் தான் செய் கிறது. அவனுக்கு அது வேண்டும். அது தணிக்கப்பட வேண்டியதுதான். அவனைக் கட்டுப்படுத்தினால் அவன் தவறு செய்கிறான். சமுதாயத்தின் முன்னால் அவன் குற்ற வாளியாகிறான். இப்படி ஒவ்வொருவரையும் ஏதாவது குற்றம் சார்த்தி உள்ளே தள்ளினால், பிறகு யார்தான் வெளியே இருக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/96&oldid=914608" இலிருந்து மீள்விக்கப்பட்டது